Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, April 29, 2024

சிற்றிலக்கியம் வினா விடைகள் - 02

  1. கலம்பகம் என்றால் என்ன? பல்வேறு உறுப்புக்கள் கலந்த இலக்கிய வகை
  2. கலம்பகம் பெயர் காரணம் யாது? கலம் + பகம் - [கலம் - 12, பகம் - 6] பதினெட்டு உறுப்புக்களைக் கொண்ட, கலந்த இலக்கிய வகை.
  3. பதினெட்டு வகைகள் யாவை? புயம், தவம், வண்டு, அம்மானை, பாண், மதங்கு, கைக்கிளை, சித்து, ஊசல், களி, மடக்கு, ஊர், மறம், கலம், தழை, இரங்கல், சம்பிரதம், கார்
  4. கலம்பகத்திற்கான பாவகைகள் யாவை? ஒருபோகு வெண்பா, கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியம் வஞ்சித்துறை, வஞ்சிவிருத்தம், வெண்டுறை வெண்பா, மருட்பா, கலிப்பா
  5. இறைவன் பாட்டுடைத் தலைவனாக வர எவ்வளவு பாடல்கள் கொண்டு அமைக்கப்படும்? 100
  6. முனிவர் பாட்டுடைத் தலைவனாக வர எவ்வளவு பாடல்கள் கொண்டு அமைக்கப்படும்? 95
  7. மன்னர் பாட்டுடைத் தலைவனாக வர எவ்வளவு பாடல்கள் கொண்டு அமைக்கப்படும்? 90
  8. அமைச்சர் பாட்டுடைத் தலைவனாக வர எவ்வளவு பாடல்கள் கொண்டு அமைக்கப்படும்? 70
  9. வணிகர் பாட்டுடைத் தலைவனாக வர எவ்வளவு பாடல்கள் கொண்டு அமைக்கப்படும்? 50
  10. ஏனையோர் பாட்டுடைத் தலைவனாக வர எவ்வளவு பாடல்கள் கொண்டு அமைக்கப்படும்? 30
  11. காலத்தால் முந்திய கலம்பகம் எது? நந்திக் கலம்பகம்
  12. நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் யார்? தொள்ளாறு எறிந்த பல்லவ மன்னன் நந்தி போத்தரையன் [மூன்றாம் நந்திவர்மன்]
  13. நந்திக்கலம்பக காலம் யாது? கி.பி. எட்டாம் நூற்றாண்டு
  14. நந்திக்கலம்பகம் நந்தி வர்மன் மீது அறம் வைத்துப் பாடப்பட்டது. அறம் வைத்துப் பாடியதில் நந்திவர்மன் இறந்தார்
  15. "நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்" என்ற வரி இடம் பெற்ற இலக்கியம் எது? சிவஞான சுவாமிகள் சோமேசர் முதுமொழி வெண்பா
  16. நந்திக் கலம்பகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை? 99 /110
  17. கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள் யாவர்? இரட்டைப் புலவர்கள் [கண்பாயக் கலம்பகத்திற்கு இரட்டையர்கள்]
  18. மதுரைக்கலம்பகத்தின் ஆசிரியர் யார்? குமரகுருபரர்
  19. தில்லைக் கலம்பகம், திருவாமாத்துர்க் கலம்பகத்தின் ஆசிரியர் யார்? இரட்டைப் புலவர்கள்
  20. திருவரங்கக் கலம்பகத்தின் ஆசிரியர் யார்? பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
  21. சிவஞான பாலைய சுவாமிகள் கலம்பகத்தின் ஆசிரியர் யார்? சிவப்பிரகாச சுவாமிகள்
  22. அம்பலவாண தேசிகர் கலம்பகத்தின் ஆசிரியர் யார்? மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  23. உலா என்றால் என்ன? உலா வருகின்ற தலைவனைக் கண்ட ஏழு பருவப் பெண்டிரும் மயங்குவதாகக் கூறப்பெறுவது உலா இலக்கியம்
  24. உலாவின் வேறு பெயர்கள் யாவை? பெண்பாற் கைக்கிளை, உலாப்புறம்
  25. ஏழு பருவ பெண்கள் யாவர்? பேதை [5 -7], பெதும்பை [8 -11], மங்கை [12 -13], மடந்தை [14 - 19], அரிவை [20 - 25], தெரிவை [26 - 32], பேரிளம் பெண் [33 - 40]
  26. உலாவின் வித்து யாது? 'ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப' என்ற தொல்காப்பிய புறத்திணை பாடாண் திணை நூற்பா
  27. உலாவிற்கான பாவகை யாது? கலிவெண்பா
  28. உலாவின் பாடுடைத் தலைவனுக்கான வயதுவரம்பு யாது? 48 வயதிற்குள்
  29. உலாவின் பிரிவுகள் யாவை? முன்னெழு நிலை, பின்னெழு நிலை என இரு பிரிவுகள்
  30. முன்னெழு நிலை வகையுள் அடங்குவன யாவை? குடிச்சிறப்பு, மரபு, நீதி, ஈகை, தலைவனை நீராட்டுதல், நல்லணி பூட்டுதல், தலைவன் உலா புறப்பாடு
  31. பின்னெழு நிலையுள் அடங்குவன யாவை? ஏழு பருவ பெண்கள் தலைவனைக் காணல், காதல் கொள்ளல், அவர்களின் செயல்பாடுகள்
  32. முத்தொள்ளாயிரத்தின் பத்துப் பாடல்கள் உலா அமைப்பில் வருவன
  33. உலா ஒரு கூறாக இடம்பெற்ற காப்பியங்கள் யாவை? பெருங்கதை, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம்
  34. முதல் உலா நூல் யாது? சேரமான் பெருமாள் நாயனாரின் திருக்கயிலாய ஞானவுலா
  35. திருக்கயிலாய ஞானவுலாவின் வேறு பெயர்கள் யாவை? ஆதியுலா, தெய்வ உலா
  36. திருக்கயிலாய ஞானவுலாவின் காலம் யாது? கி.பி. 8 ஆம் நூற்றாண்டு
  37. ஒட்டக்கூத்தர் இயற்றிய உலா நூல் யாது? மூவருலா
  38. உலா பாடுவதில் வல்லவர் யார்? ஒட்டக்கூத்தர் [கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்]
  39. மூவருலா என்பது யாது? விக்கிரம சோழன், குலோத்துங்கச் சோழன், இராசராசச் சோழன் ஆகிய மூவரையும் பற்றியது.
  40. நம்பியாண்டார் நம்பி இயற்றிய உலா நூல்? ஆளுடைப் பிள்ளையார் திருவுலா
  41. சொக்கநாதருலா யாரால் இயற்றப்பட்டது? அ. கு. ஆதித்தர்
  42. காமராசர் உலா யாரால் இயற்றப்பட்டது? அ. கு. ஆதித்தர்
  43. கலைஞர் உலாவின் ஆசிரியர் யார்? பாவலர் ஏறு ச. பாலசுந்தரனார்
  44. பெரியார் உலாவின் ஆசிரியர் யார்? மறையரசனார்
  45. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உலாவை இயற்றியவர் யார்? முத்துலிங்கம்

No comments:

Post a Comment