Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Tuesday, January 2, 2024

பழமையான மூலிகை கருஞ்சீரகம் பயன்படுத்தினால் இவ்வளவு நன்மையா?


பழமையான மூலிகைகளில் ஒன்றாக கருதப்படும் கருஞ்சீரகம் பயன்படுத்துவதால் உடலுக்கு மிகுந்த நன்மை என நாம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

சித்த மருத்துவத்தில் கருஞ்சீரகம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது என்பதும் இறந்தவரை உயிர்ப்பிப்பது தவிர மற்ற அனைத்து நோய்களையும் கருஞ்சீரகம் குணப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

கருஞ்சீரகம் உணவில் பயன்படுத்தினால் இதய நோய்கள் வராது என்றும் அதில் உள்ள மருத்துவ பலன்கள் அனைத்து நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டது என்றும் கூறப்படுகிறது.

இந்தியா மட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகள் ஐரோப்பா போன்ற நாடுகளிலும் கருஞ்சீரகத்தை பலர் பயன்படுத்தி வருகின்றனர். சித்த மருத்துவத்தில் கருஞ்சீரகம் மிகவும் முக்கியமானது.

தாய்ப்பால் சுரப்பதற்கு, தோல் நோய்களை தவிர்ப்பதற்கு, மூக்கடைப்பை நீக்குவதற்கு, இருமல் மற்றும் விக்கல் வந்தால் நிவாரணியாக இருப்பது, கருஞ்சீரகம் தான். மேலும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு கொழுப்பு நீங்குவதற்கு, ஆண்மை பெருக, நீரிழிவு நோய் குணமாக கருஞ்சீரகத்தை பயன்படுத்தலாம்.