THAMIZHKADAL GROUPS


கட்டணத்தை உயர்த்தும் தமிழக அரசு.? வெளியான தகவல்.!!!

சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணத்தை ரூ. 20,000 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே, வீட்டு வரி, சொத்து வரியை அரசு கடுமையாக உயர்த்தியது.

அதோடு, காலதாமதமாக வரி செலுத்தினால் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணத்தையும் தற்போது உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.