இந்தாண்டு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு அறிவிக்கப்பட்டது.
அதில், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், ரொக்க பணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும், விலையில்லா வேட்டி, சேலை ரேஷன் கடைகள் மூலம் வழஙகப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படுவதற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை முதல் ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள், நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1,000 பரிசுத்தொகையை பெற்று கொள்ளலாம். 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சக்கரை, முழு கரும்புடன் ரூ.1,000 பரிசுத்தொகை வழங்கப்படும். இதில் குறிப்பாக, சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா இல்லா அட்டைதாரர்கள், தவிர அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Tags:
பொதுச் செய்திகள்