ஜனவரி 10 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு - தமிழக அரசு அறிவிப்பு

இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் ரூ.1000 பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது.

சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா இல்லா அட்டைதாரர்கள், தவிர அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து. பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படுவதற்கான டோக்கன் நாளை முதல் ஜனவரி 9ம் தேதி வரை விநியோகம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள், நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1,000 பரிசுத்தொகையை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை முதல் டோக்கன் வழங்கப்பட உள்ள நிலையில், ஜனவரி 10ம் தேதி முதல் ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 10 முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பினை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஜனவரி 13ம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பினை பெற முடியாதவர்கள், ஜனவரி 14ம் தேதி பெற்று கொள்ளலாம் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.
Previous Post Next Post