CSIR-ல் 444 அதிகாரி காலிப் பணியிடங்கள் விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி போதும்

ஒருங்கிணைந்த நிர்வாக சேவைகள் பணியில் (COMBINED ADMINISTRATIVE SERVICES EXAMINATION - 2023 ) அடங்கிய குரூப் பி (அரசிதழ்) மற்றும் குரூப் பி பிரிவு (அரசிதழ் சாராத) அதிகாரி பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (CSIR) வெளியிட்டுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த தேர்வுக்கு ஏதேனும் ஒரு டிகிரி போதும் என்பதால், டிஎன்பிஎஸ்சி, எஸ்.எஸ்.சி (SSC), ரயில்வே (RAILWAY), வங்கி (BANKING), யூபிஎஸ்சி (UPSC), இராணுவம் (DEFENCE) போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகி வரும் வரும் தேர்வர்களுக்கு இதற்கு விண்ணப்பிக்கலாம். அரசுப்பணி ஒன்றையே நீங்கள் கனவாகக் கொண்டிருந்தால், கடைசி நேரம் வரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

இணையவழி மூலம் 12/01/2024 அன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க இயலும். பின்னர் அச்சேவை நிறுத்தப்படும். இணைய வழி மூலம் தேர்வுக் கட்டணத்தை செலுத்த 14/01/2024 அன்று மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படுவர். பின்னர் அச்சேவை நிறுத்தப்படும்.

காலியிடங்கள் பற்றிய விவரங்கள்:

Section Officer (Group B - Gazetted) - 76 காலியிடங்கள் ; Assistant Section Officer (Group B Non-Gazetted) - 368 காலியிடங்கள்


கல்வித் தகுதி: இந்த பதவிக்கு, பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது.

வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 12/01/2024 அன்று 33 வயதை பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறலாம்.

தேர்வு முறை (Selection Procedure) :

இந்த பதவிக்கான தேர்வு முறை எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இரண்டு நிலைகளைக் கொண்டது. எழுத்துத் தேர்வு 3 தாள்களைக் கொண்டது. தாள்- Iல், பொது விழிப்புணர்வு (General Awareness) தொடர்பாக 100 வினாக்களும், ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) தொடர்பாக 50 கேள்விகளும் என மொத்தம் 150 வினாக்கள் கேட்கப்படும்.

தாள் - IIல் பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning) தொடர்பாக 200 வினாக்கள் கேட்கப்படும்.


இந்த இரண்டு தாளில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் III-ம் தாளுக்கு அழைக்கப்படுவார்கள். கேள்விக்கு விரிவான முறையில் பதிலளிக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் கட்டுரைஎழுதுதல் /சுருக்கி வரைதல்/கடிதம் வரைதல் ஆகியவை இதில் அடங்கும். மூன்று தாள்களில் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

Assistant Section Officer பதவிக்கு மட்டும் கூடுதலாக கணினி திறன் தேர்வு நடத்தப்படும். இது, தகுதித் தேர்வாக மட்டுமே நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 500/- ஆகும். இடுப்பினும், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி? CSIR -ன் https://www.csir.res.in/ என்ற அதிகாரப்பூர்வ தளத்தின் வாயிலாக எதிர்வரும் ஜனவரி 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆள்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யுவம்.

Post a Comment

Previous Post Next Post