Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, December 11, 2023

ராணுவ செவிலியர் சேவை தேர்வு: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

2023- 24ம் ஆண்டு இந்திய ராணுவ சேவை ஆணைய பணி (Short Service Commission) நிலையில் அடங்கிய ராணுவ செவிலியர் சேவை ( Military Nursing Service - MNS) காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

இந்த பதவிக்குபெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள பெண் விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் டிசம்பர் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முக்கியமான நாட்கள்: இணையவழி மூலம் 26.12.2023 அன்று மாலை 6 மணி வரை விண்ணப்பிக்க இயலும். பின்னர் அச்சேவை நிறுத்தப்படும். அன்றிரவு 11:30 மணிக்குள் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். இணையவழி விண்ணப்பத்தை 27.12.2023 முதல் 28 .12.2023 இரவு 11.30 மணி வரை திருத்தம் செய்யலாம். பின்னர் அச்சேவை நிறுத்தப்படும். இந்த பதவிக்கான கணினி வழி எழுத்துத் தேர்வு 1/01/2024 அன்று வெளியிடப்படும். இதற்கான, தேர்வு அணுமதிச் சீட்டு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

கல்விக்கான தகுதிகள்: இந்திய செவிலியர் மன்றத்தால் (Indian Nursing Council) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் MSc (Nursing)/PB BSc (Nursing)/BSc (Nursing) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 26.12.2023 அன்று 21- 35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.900 ஆகும்.

தேர்வு முறை: கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, நேர்காணல் தேர்வு, உடல் தகுதி ஆகியவற்றின் மூலம் இறுதி தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும். மேலும், கூடுதல் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகளை தேசிய தேர்வு முகமையின் இணையதள முகவரியான exams.nta.ac.in-ல்காணலாம்.

No comments:

Post a Comment