Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Saturday, December 16, 2023

வெளிநாட்டு பல்கலையுடன் இணைந்து ஆன்லைன் பட்டப்படிப்பு செல்லாது: யூஜிசி எச்சரிக்கை


பல்கலைக்கழக மானிய குழுவின் செயலாளர் மணீஷ் ஜோஷி கூறுகையில்," சில கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்திதாள்கள், சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்து சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து ஆன்லைன் முறையில் பட்டங்கள் மற்றும் டிப்ளமோ படிப்புக்களை வழங்குவது பல்கலைக்கழக மானிய குழுவின் கவனத்துக்கு வந்துள்ளது.

யூஜிசியால் அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது அல்லது ஏற்பாடுகளை யூஜிசி அங்கீகரிப்பது இல்லை. இதுபோன்று வழங்கப்படும் பட்டங்களும் யூஜிசியால் ஏற்றுக்கொள்ளப்படுவது கிடையாது. எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்றார்.