Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, December 16, 2023

இரத்தத்தை விருத்தி செய்ய, உடல் எடையைக் குறைக்க, சிறுநீர் கடுப்பைப் போக்க சீத்தாப்பழம் சாப்பிடுங்கள்

சீதாப்பழம் அல்லது சீதளப்பழம் (Sugar apple), தைவானில் புத்தர் தலை என்றழைக்கப்படும் சீதாப்பழத்தை அன்னமுன்னா பழம் என்று இலங்கையில் அழைக்கின்றனர்.

இந்தப் பழத்தில் விட்டமின் சி, விட்டமின் பி6, கால்சியம், இரும்புச்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்துக்களும் நார்ச்சத்தும் மிகுதியாக உள்ளது. மலைப் பிரதேசங்களில் மிக அதிகமாக விளையக்கூடிய சீதாபழம் நல்ல மணம் கொண்டது.

சீதாப்பழத்தின் வெளிப்புற தோல் கடினமானதாக இருக்கும். உள்ளே வெள்ளை நிற சதைப்பிடிப்பு கொண்ட பகுதியில் உள்ள கொட்டைகளை நீக்கிவிட்டு உண்ணவேண்டும். ஆங்கிலத்தில் சுகர் ஆப்பிள் என்று அழைக்கப்படும் சீதாபழத்தின் சுவை இனிப்பாக இருக்கும். காயாக இருக்கும்போது துவர்ப்பு சுவையுடன் இருக்கும். கிராமப்புறங்களில் மட்டுமல்ல, நகர்ப்புறங்களிலும் கிடைக்கும் சீதாபழத்தை சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைத் தெரிந்துக் கொள்வோம்.


அல்சருக்கு சீதாபழம்: நீண்டகாலமாக அல்சர் நோயால் அவதிப்படுபவர்கள் சீதாப்பழம் சாப்பிட்டு வந்தால் அல்சர் பாதிப்பு விரைவில் குணமாகும். அதேபோன்று அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்களும் இந்தப் பழத்தை சாப்பிடலாம். சீதாப்பழம் நமது உடலில் மெட்டாபாலிசத்தை ஊக்குவிக்கும். நமது உணவை ஆற்றலாக மாற்றுக் கூடிய அம்சம் சீதாபலத்தில் உள்ளது.

கண் மற்றும் இதயத்திற்கு நல்லது: சீதாப்பழம் சாப்பிடுவதால் கண் பார்வை மேம்படும். இதய நலன் மற்றும் மூளையின் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கும் சிறந்தது. சீதாப்பழத்தில் நுண் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இது சருமத்தை மிருதுவாக்குகிறது. குழந்தைகளுக்கு இந்தப் பழத்தை கொடுக்கலாம்.

இரத்தத்தை விருத்தியாக்கும்: ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்களுக்கு சீதாபழம் நல்ல மருந்து. நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதற்கு சீதாப்பழம் உதவியாக இருக்கிறது. இரத்தச் சோகை உள்ளவர்கள், கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் குறைபாட்டை எதிர்கொள்ளும் பெண்கள் சீதாப்பழத்தை சாப்பிட்டால் ரத்தம் விருத்தியாகும். ரத்தசோகையை தீர்க்கும் அனைத்து சத்துக்களும் சீதாபழத்தில் உள்ளது.

உடல் எடையைக் குறைக்கும்: உடம்பு ஊளைச்சதை உள்ளவர்கள் தொடர்ந்து சீதாப்பழம் சாப்பிட்டு வந்தால், ஊளைச்சதை வெகுவாக குறையும். சீதாபழம் உடல் சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. உடல் சூட்டினால் ஏற்படும் மாந்தத்தைக் குணப்படுத்தும் தன்மை சீதாபழத்திற்கு உண்டு

நீண்டகால நோய்களை தடுக்கும்: நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சீதாப்பழம் உடல் பருமனை தடுக்கக் கூடியது.இதயபிரச்சனைகளை எதிர்கொள்ள தேவையான சக்தியைக் கொடுக்கிறது. ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும் மற்றும் புற்றுநோயை தடுப்பதற்கு தேவையான பண்புகள் சீதாபழத்தில் உள்ளன. செரிமானப் பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு சீதாபழம் அருமருந்தாக இருக்கும்.

சிறுநீரகத்தை பாதுகாக்கும் சீதாபழம்: சிறுநீர் பிரியாமல், நீர் கடுப்பு ஏற்பட்டால் அது மிகவும் வலியை கொடுக்கும், இந்தப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், சீதாப்பழத்தை சாறாக எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து பருகினால், சிறுநீர் பிரியும். நீர்க்கடுப்பும் நீங்கும்.

No comments:

Post a Comment