Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Saturday, December 16, 2023

உதவி வேளாண் அலுவலர் பணிக்கு போட்டித் தேர்வு - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு


தமிழகத்தில் உதவி வேளாண் அலுவலர் பணியிடம் - 84, உதவி தோட்டக்கலை அலுவலர் - 179 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இவற்றை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கான தேர்வு, 2024, பிப்., 7ல் நடைபெறும். https://www.tnpsc.gov.in என்ற இணைய தள முகவரி வாயிலாக, வரும், 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

இப்போட்டித்தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு உதவும் வகையில், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக, இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

பங்கேற்க விரும்புவோர், 0422 - 2642 388, 93615 76081 என்ற எண்களில் முன்பதிவு செய்ய வேண்டும் என, கலெக்டர் கிராந்திகுமார் அழைப்பு விடுத்திருக்கிறார்.