ஐடிஐ, டிப்ளமோ, பி.இ. படித்தவர்களுக்கு பவர்கிரிட் கார்ப்பரேஷனில் வேலை...!

ஐடிஐ, டிப்ளமோ, பி.இ. படித்தவர்களுக்கு பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் (பிஜிசிஐஎல்-PGCIL) வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பவர் கிரிட் நிறுவனத்தில் ஜூனியர் டெக்னீஷியன் டிரைய்னி (Junior Technician Trainee) பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்குhttps://www.powergrid.in/job-opportunitiesஎன்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (பிஜிசிஐஎல்-PGCIL) என்பது மத்திய மின்துறை அமைச்சகத்தின் உரிமையின் கீழ் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும். இது முக்கியமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மொத்த மின்சாரத்தை எடுத்துச் செல்லும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் தலைமையகம் குருகிராமில் உள்ளது. பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 50 சதவீத மின்சாரத்தை அதன் டிரான்ஸ்மிஷன் நெட்வொர்க்கில் அனுப்புகிறது.


பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் 1989-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி நிறுவனங்கள் சட்டம், 1956-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ. 5,000 கோடியாக (பின்னர் 2007-08-ம் நிதியாண்டில் ரூ. 10,000 கோடியாக உயர்த்தப்பட்டது) தொடங்கப்பட்டது. இது ஒரு பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமாக மாறியது. 2020 டிசம்பரில் நிறுவனத்தில் 51.34% பங்குகளுடன் செயல்படுகிறது.

இது முன்பு "நேஷனல் பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட்" என்ற பெயரில் விளங்கியது. நாட்டில் உயர் மின்னழுத்த பரிமாற்ற அமைப்புகளைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல், சொந்தமாக்குதல், இயக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

1990 நவம்பரில், இந்த நிறுவனம் வணிகத்தைத் தொடங்குவதற்கான மத்திய அரசின் சான்றிதழைப் பெற்றது. நிறுவனத்தின் பெயர் 1992-ம் ஆண்டில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் என்று மாற்றம் மாற்றப்பட்டது.

பவர் கிரிட் நிறுவன நிர்வாகம் 1991 ஆகஸ்ட் முதல் செயல்படத் தொடங்கியது, பின்னர் தேசிய அனல் மின்சாரம் (NTPC), தேசிய நீர்மின்சாரக் கழகம் (NHPC)], நார்த் ஈஸ்டர்ன் எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NEEPCO), நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) ஆகியவற்றிலிருந்து பரிமாற்ற சொத்துக்களை தன் வசப்படுத்தியது.

இந்த பெருமைமிகு பிஜிசிஐஎல் (PGCIL) நிறுவனத்தில்தான் தற்போது ஜூனியர் டெக்னீஷியன் டிரைய்னி (Junior Technician Trainee) பணியிடங்கள் காலியாக உள்ளன. இங்கு மொத்தம் 203 பணியிடங்களை பிஜிசிஐஎல் நிரப்ப உள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஐடிஐ (எலக்ட்ரிக்கல்), டிப்ளமோ, பி.இ., பி.டெக்( ITI (Electrical) pass in Electrician / Diploma/ B.E./ B.Tech) படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21500-3%-74000/- ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து டிசம்பர் 12-ம் தேதிக்குள் (12.12.2023) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

பணியிடம் தொடர்பான விளம்பரத்தைக் காணhttps://drive.google.com/file/d/1MIowX3timHnsRuKsJ9BcBOj0YpZ0GqmH/view?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DHஎன்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொண்டு அறியலாம்.

கூடுதல் விவரங்களுக்குhttps://www.powergrid.in/job-opportunities?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DHஎன்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post