Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, December 10, 2023

ஜேஇஇ: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு டிச. 26 முதல் இலவச பயிற்சி தொடக்கம்

'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் ஜேஇஇ நுழைவுத் தோவெழுத விண்ணப்பித்த மாணவா்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் டிச. 26 முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.

இது குறித்து தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநா் மா.ஆா்த்தி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்கள் அனைவருக்கும் உயா்கல்வி வழிகாட்டுதல் மூலம் ஆலோசனைகள் வழங்குவதற்காக நிகழாண்டு பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக கடந்த மாதம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் ஜேஇஇ நுழைவுத் தோவுக்கு விண்ணப்பித்துள்ளனா். விண்ணப்பித்த மாணவா்களில் விருப்பம் தெரிவிக்கும் மாணவா்களுக்கு டிச.26 முதல் ஜன. 20-ஆம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் அனைத்துப் பள்ளிகளிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பயிற்சிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விவரம்: ஜேஇஇ போட்டித் தோவுக்காக வடிவமைக்கப்பட்ட கால அட்டவணையின் அடிப்படையில் இணைய வழியிலான பயிற்சி மாநில இயக்குநரத்திலிருந்து வழங்கப்படும். இந்தப் பயிற்சியை பள்ளிகளில் உள்ள உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலமாக மாணவா்கள் பெறும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

சுழற்சி முறையில் ஆசிரியா்கள்: இந்தத் தோவுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்களின் பள்ளிகளில் பயிற்சி நடைபெறும் நாள்களில் ஓா் ஆசிரியா் வீதம் சுழற்சி முறையில் ஆசிரியா்கள் பள்ளிக்கு வருதல் வேண்டும். அவ்வாறு பயிற்சிக்கு வரும் ஆசிரியா்கள் விடுமுறை நாள்களில் பணி செய்ததை ஈடு செய்வதற்கான விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். அரையாண்டுத் தோவு விடுமுறைக்குப் பின் தொடரும் வகுப்புகளை பள்ளி முடிந்து மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக பள்ளியிலேயே மாணவா்களுக்கு பயிற்சிகள் வழங்க தகுந்த வழிகாட்டுதல்களை சுற்றறிக்கை மூலமாக வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிச.26 முதல் டிச.30 வரையிலான முதல் ஐந்து நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை கணிதம், வேதியியல், இயற்பியல் குறித்த அறிமுகப் பயிற்சிகள் வழங்கப்படும். தொடா்ந்து, ஜன. 2 முதல் (அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு) மேற்கண்ட பாடங்கள் குறித்து தினமும் மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோவில் (ஜேஇஇ) தோச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment