Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, November 26, 2023

காலையில் வெறும் வயிற்றில் செம்பருத்தி தேநீர் அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்


செம்பருத்தி நமது நாட்டில் பரவலாக காணக்கூடிய ஒரு செடியாகும். இந்தச் செடியின் இலைகள் மலர் மற்றும் வேர் ஆகியவை ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

சித்த வைத்தியங்களில் செம்பருத்திப் பூ தங்க பஸ்பத்தோடு ஒப்பிடப்படுகிறது. இந்த செம்பருத்திப் பூவை தங்க புஷ்பம் என்று மருத்துவ உலகில் அழைக்கின்றனர். இத்தகைய மருத்துவ குணங்களை உடைய செம்பருத்திப்பூ தேநீர் குடிப்பதால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என பார்ப்போம்.

செம்பருத்தி பூவை நன்றாக கொதிக்க வைத்து அதிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் பருகுவதால் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தத் தேநீர் உயர் ரத்த அழுத்தத்திற்கு சிறந்த மருந்தாகும். 12 நாட்கள் தொடர்ந்து செம்பருத்தி தேநீர் குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். செம்பருத்தி சாறு எடுத்து 21 நாட்கள் குடித்து வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதாக பிரபல மருத்துவர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது.

உடலில் கெட்ட கொழுப்புகளை அகற்றுவதற்கும் செம்பருத்தி தேநீர் உதவுகிறது. செம்பருத்தியில் இருக்கும் சபோனின் அமிலம் நம் உடல் கெட்ட கொழுப்புகளை உறிஞ்சுவதை தடுக்கிறது. மேலும் செம்பருத்தி தேநீர் குடித்து வரும்போது கெட்ட கொழுப்புகளின் எண்ணிக்கை உடலில் குறைவதோடு நல்ல கொழுப்புகள் அதிகரிப்பதை தூண்டுகிறது. செம்பருத்தி பூவின் சார்பில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரை அருந்துவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதை நம் உடலில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு செல்களின் வளர்ச்சியை தூண்டி உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை கொடுக்கிறது.

செம்பருத்தி பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள் கூந்தல் பராமரிப்பில் முக்கிய பங்கு வைக்கிறது. இவற்றை பயன்படுத்தும் போது முடி கொட்டுவது குறைகிறது. மேலும் கூந்தலுக்கு அடர்த்தியை தருவதோடு கருமை நிறத்தையும் கொடுக்கிறது. காலை எழுந்ததும் நான்கு முதல் ஐந்து செம்பருத்தி பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வர வயிற்றில் இருக்கும் புண்கள் குணமாகும். செம்பருத்தி பூவை அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தி வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதோடு சீரான முறையில் ரத்த ஓட்டம் இருப்பதற்கும் உதவுகிறது.

No comments:

Post a Comment