Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Sunday, November 26, 2023

அரசு விரைவு போக்குவரத்து கழக தேர்வு.. காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியீடு.!!!


தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் கலந்து 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

இந்த நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 675 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப கடந்த நவம்பர் 19ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் நவம்பர் 27 இன்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 19ஆம் தேதி நடந்த இந்த தேர்வுக்கான மதிப்பெண் ஓஎம்ஆர் விடைத்தாளுடன் கூடிய முடிவுகளை www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக அறியலாம். இதில் தேர்ச்சி பெற்றோருக்கு உடல் தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட உள்ளதாகவும் அதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.