கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டத்தில் உள்ள வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்பம் நிறுவனத்தில் நடைபெற உள்ளது .
இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டுதல் மையம் இணைந்து நடத்த உள்ளது. இந்த முகாமில் 2,000-ற்கும் மேற்பட்ட துறையின் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவைக்கேற்ற நபர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு பட்டப்படிப்பு, BE, ஐடிஐ, செவிலியர்கள் மாற்றுத்திறனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் தங்களுடைய கல்வி சான்றிதழ் பாஸ்போர்ட் அளவுடைய புகைப்படத்துடன் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கலந்து கொள்ளலாம். மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ள உள்ளவர்கள் https://tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
Tags:
வேலைவாய்ப்பு