Friday, September 1, 2023

இனி கட்டடம் கட்ட முன் அனுமதி அவசியம்.! இல்லையென்றால் சீல் வைக்கப்படும்.! அமைச்சர் அதிரடி உத்தரவு.!

தமிழகத்தில் கட்டடம் கட்டும்போது அரசிடம் கண்டிப்பாக அனுமதி பெற்று கட்ட வேண்டும்‌.

தமிழகத்தில் உள்ள நிலப்பரப்பில் 7 சதவீதம் மட்டுமே மாஸ்டர் பிளான்கள் வரையறை செய்யப்பட்டுள்ள நிலையில், அது தற்போது 19 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில், அதனை மேலும் 22 சதவீதமாக உயர்த்தப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

மேலும் கட்டடம் கட்டும்போது அரசிடம் கண்டிப்பாக அனுமதி பெற்று கட்ட வேண்டும், முன் அனுமதி பெறாமல் நிறைவு சான்றிதழ் பெற்றால் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என கூறி அந்த கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும். அரசு அங்கீகாரம் பெறாத மனை பிரிவுகள் மற்றும் தனி மனைகள் வரைமுறை படுத்துவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது, அதை ஒரு சிலர் மட்டுமே பயன்படுத்தி உள்ளனர், இதன் காரணமாக மேலும் 6 மாத காலம் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதே போல, விவசாய நிலங்கள் விற்பனைக்கு வரும்போது நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து, அதற்கு பிறகு தான் விற்பனைக்கு வருகிறது. பொதுமக்கள் அல்லது ரியல் எஸ்டேட் உரிமையார்கள் யாராக இருந்தாலும் கட்டிடங்களை கட்டும் முன் முறையாக உரிமம் பெற்று பின் கட்டிடங்களை கட்ட வேண்டும். இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News