Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 26, 2023

ஆதார் கார்டு + நிலப்பட்டா.. வருவாய்த்துறை திடீர்னு சொன்ன அறிவிப்பு.

பட்டா உள்ளிட்ட நில ஆவணங்கள் குறித்து வருவாய்த் துறை முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.. தொடர்ந்து நடந்துவரும் முறைகேடுகளை தடுக்க, இந்த முடிவினை தமிழக அரசு எடுத்திருக்கிறது.

தற்போது பத்திரப்பதிவு துறையே ஆன்லைன் மயமாகிவிட்டது. அந்தவகையில், நாடு முழுவதும் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றவும், ஆதார், பான் உள்ளிட்ட தகவல்களை அதனுடன் இணைக்கவும், மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்தவகையில், தமிழகத்திலும், நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கான பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது.

பட்டா வரைபடம்: குறிப்பாக, பட்டா, நில வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை ஆன்லைன் வாயிலாக வழங்கும் பணி செயல்பாட்டில் உள்ள நிலையில், பட்டா உள்ளிட்ட நில ஆவணங்களில் உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நில அளவை மற்றும் வருவாய்த் துறை தற்போது முடிவு செய்துள்ளது.

மோசடிகள்: இதற்கு காரணம், நிலஅபகரிப்பு மோசடிகள் ஆங்காங்கே நிறைய நடந்துவருவதால், இவைகளை களைய வேண்டியது அரசின் கடமையாக உள்ளது. அதிலும், வெறும் ஆவணங்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஆள்மாறாட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது, ஒருவருக்கு சொந்தமான நிலத்தில், போலி ஆவணங்களை வைத்து, சட்டப்பூர்வ நில உரிமையாளராகிவிடுவது போன்றவைகள் நடக்க வாய்ப்புள்ளது.

அதனால்தான், பட்டாவில் இடம்பெறும் விவரங்களில் உரிமையாளரின் அடையாளத்தை உறுதி செய்ய போதுமான ஆவணங்கள் இல்லை என்பதால் பட்டா உள்ளிட்ட ஆவணங்களில் ஆதார் நம்பரை இணைக்க வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.

பட்டா + ஆதார்: இப்படி பட்டாவில் ஆதாரை இணைப்பதால், ஒருவர் பெயரில் எத்தனை சொத்துகள் உள்ளன? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.. நில அபகரிப்பு போன்ற குற்றங்களையும் இதன்மூலம் தடுக்க முடியும் என்பதாலேயே பொதுமக்களின் நன்மை கருதி அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் சொல்லும்போது, கணினி மயமாக்கப்பட்ட நில ஆவணத்துடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், உண்மையான உரிமையாளர்கள் மட்டுமே பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை உறுதி செய்யவும் முடியும்.

புதிய உத்தரவு: அத்துடன், உண்மையான உரிமையாளர்கள் மட்டுமே பத்திரப்பதிவு பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை உறுதி செய்ய முடியும். மாநில அரசின் இந்த முன்மொழிவுக்கு ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒப்புதல் அளித்த நிலையில், தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது" என்றனர்.

No comments:

Post a Comment