நம்மில் பலரிடமும் ஏதாவது ஒரே ஒரு கிழிந்த ரூபாய் நோட்டாவது மாற்றப்படாமல் அப்படியே இருக்கும். எவ்வாறு கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது பற்றியும், அதற்கான வழிமுறைகளைப் பற்றியும் ரிசர்வ் வங்கி சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
ஆனால் நம்மில் பலருக்கும் இதைப் பற்றிய புரிதல்கள் இல்லை. மேலும் எங்கெங்கெல்லாம் ரூபாய் நோட்டுக்களை மாற்றலாம் என்பதற்கும், எவ்வளவு ரூபாய் நோட்டுக்களை மாற்றலாம் என்பதற்கும், அதற்கான விதிமுறைகளையும் ரிசர்வ் வங்கி தெளிவாக வகுத்துள்ளது. அதன்படி நம்மிடம் உள்ள மாற்றுவதற்கான தெளிவான வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
முதலில் எந்த ஒரு வங்கியுமே வாடிக்கையாளர்கள் அளிக்கும் சேதமடைந்த அல்லது கிழிந்த ரூபாய் நோட்டுக்களை வாங்க முடியாது என கூற முடியாது. இது ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுள் ஒன்று என்பதை நினைவில் கொள்ளவும். எனவே உங்களிடம் இருக்கும் எந்த ஒரு ரூபாய் நாட்டையும் நீங்கள் வங்கிக்கு சென்று அதனை மாற்றிக் கொடுக்கும்படி கோரிக்கை வைக்கலாம். மேலும் இவ்வாறு பணத்தை வங்கிகளுக்கு சென்று மாற்றுவதற்கும் ரிசர்வ் வங்கி சில எல்லைகளை வகுத்துள்ளது. அதாவது ரூபாய் 5000 க்கு மிகாமல் 20 ரூபாய் நோட்டுகளை நீங்கள் வங்கிகளுக்கு நேரடியாக சென்று மாற்றித் தருமாறு கோரிக்கை வைக்க முடியும்.
உடனடியாக வங்கிப் பணியாளர் நீங்கள் அளிக்கும் சேதமடைந்த நோட்டுக்களை வாங்கிக் கொண்டு, அதே மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுக்களை உங்களுக்கு அளிப்பார்கள். இதற்காக எந்த ஒரு கூடுதல் கட்டணமோ அல்லது கமிஷன் தொகையோ வங்கியானது வசூலிக்கக் கூடாது. ஒருவேளை மேலே கூறிய முறையில் எந்த ஒரு வங்கியானது வாடிக்கையாளருக்கு செய்தமடைந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றி தர ஆட்சேபனை தெரிவித்தாலும், ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதிமுறைகளை அது மீறுவதாகும். வாடிக்கையாளர்கள் அதற்காக வழக்கு தொடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் முழுவதுமாக எரிந்த ரூபாய் நோட்டுக்களையோ அல்லது மீண்டும் பொருத்தவே முடியாதபடி துண்டு துண்டாக கிழிந்த ரூபாய் நோட்டுகளையும் மாற்றித் தரும்படி வாடிக்கையாளர்கள் வங்கியை அணுக முடியாது. அப்படி அனுப்பும் பட்சத்தில் வங்கி பணியாளர்கள் அதனை நிராகரிக்க அவர்களுக்கு உரிமை உண்டு.
கிழிந்த ரூபாய் நோட்டுகளை நீங்கள் வங்கியிடம் அளிக்கும்போது நோட்டுக்கள் கிழிந்து உள்ள தன்மைக்கு ஏற்ப அதற்கான மதிப்பை ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது உள்ளது. எனவே வங்கிகள் அதன் அடிப்படையில் உங்களது ரூபாய் நோட்டை மாற்றி தருவார்கள். இவற்றில் கூட்டுறவு வங்கி மற்றும் கிராம வங்கிகளுக்கு ரூபாய் நோட்டுகளை மாற்றித் தரும் அதிகாரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
பொதுச் செய்திகள்