Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Monday, August 28, 2023

தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில் புதுவையில் ஒருவர் கூட இல்லை


நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில் புதுவைக்கு ஒரு விருது கூட இல்லை.

மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நாடு முழுவதும் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, 2023-ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 50 ஆசிரியர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 2 பேர் இடம் பெற்றுள்ளனர்.

ஆனால் புதுவை மாநிலத்தில் இருந்து இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 5 ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் விண்ணப்பித்த ஒரு ஆசிரியர் பெயர் கூட விருது பட்டியலில் இல்லை. கடந்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் சரிந்திருந்த சூழலில் தற்போது தேசிய நல்லாசிரியர் விருதிலும் விண்ணப்பித்த யாரும் விருதுக்கு தேர்வாகாதது கல்வித் துறை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.