Wednesday, August 23, 2023

தினமும் தினமும் சாப்பிடும் சாதம் கூட மாரடைப்பு வர வைக்குமா..

நம் இந்தியர்களின் முக்கிய உணவே சாதமும், சப்பாத்தியும் தான். சப்பாத்தியைக் கூட சாப்பிடாமல் இருந்துவிடுபவர்கள், தினமும் ஒரு வேளையாவது சாதம் இல்லாமல் இருக்க மாட்டார்கள்.

அப்படிப்பட்ட அரிசி சாதம், மோசமான உணவாக கருதப்படவில்லை யென்றாலும், சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை அரிசி சாதத்தை அதிகம் உண்பது, பல்வேறு கொடிய நோய்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அத்தகைய அரிசியானது இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் பரவலாக உண்ணப்படும் உணவுப்பொருளாக இருக்கிறது. இதில் கலோரிகளும், ஊட்டச்சத்துக்களும் அதிகமாக உள்ளன. ஆனால், இதில் இருக்கும் ஆர்சனிக் என்ற பொருள் தான் இத்தகைய கொடிய நோய்களுக்கும், உயிரிழப்புக்கும் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.


"உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், ஒரு நாளைக்கு 1/2 கப் முதல் 1 கப் வரை அரிசி சாதம் எடுத்துக்கொண்டாலே போதும். மேலும் சத்தான காய்கறிகளையும் கலந்து சாப்பிட வேண்டும்.அப்போது தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்" என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News