டென்ஷன் போகணுமா? இந்த 15 வழிமுறைகளை கடைப்பிடியுங்கள்!

தினம் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் முன் மனிதர்களுக்குத்தான எத்தனை பிரச்சினைகள் ?வீட்டில், குழாயில் தண்ணீர் வருவது முதல் சமையல் சரியாக வராதது வரை, சமயத்துக்கு வண்டி மக்கர் செய்வது முதல் அலுவலகத்தில் மேலதிகாரியின் அலட்சியம் வரை என்று வெளியிலும் ஏகப்பட்ட சோதனைகளைக் கடக்க வேண்டியுள்ளது.

எல்லாருக்குமே டென்ஷன் என்பது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சூழலில் ஏற்படுவது சகஜம்தான் அந்த நேரத்தில் அந்த டென்ஷனை போக்க நாம் என்ன மாதிரியான முறைகளை கையாள வேண்டும் என்பதற்கான பட்டியல்தான் இது ..

காலாற நடந்து வேடிக்கை பார்த்தல் என்பது வெகு சுலபமாக டென்ஷனை போக்கும் ஒரு வழி.


பிடித்த இசை கேட்பது அல்லது ஓவியம் வரைவது அட்லீஸ்ட் காகிதங்களில் கிறுக்குவது போன்ற செயல்களில் நம்மை மறப்பதும் அழுத்தத்தைக் குறைக்கும்.

கண்ணாடி பொருட்கள் உடைந்து விடாமல் இருப்பதற்காக அதை சுற்றி வரும் பபுள்ஸ் கவர் அதை உடைத்து நம் டென்ஷனை வெளியேற்றலாம் சிறுபிள்ளைத்தனம் என்று நினைத்தாலும் இது உண்மை.

குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடுவதும் அவர்களைக் கொஞ்சுவதும் டென்ஷனை குறைக்கும்.

சிறந்த வழி ஷாப்பிங் செய்வது நமக்கு பிடித்த பொருட்களை வாங்குவது என்பது டென்ஷனை குறைக்கும். ஆனால் தேவையான பொருள்களை மட்டும் வாங்குவது முக்கியம் .

நமக்கு பிடித்த நபர்களுடன் நம்மை நம்பும் நபர்களுடன் மனம் விட்டு உரையாடுவது நம் மனதில் உள்ள படபடப்பை அகற்றும்.

நாம் விரும்பும் உணவுகளை சுவைத்து உண்ணும்போது டென்ஷன் விரைவில் குறையும் .

நமக்கு பிடித்த விளையாட்டில் ஈடுபடுவது (அது தாயமோ பந்தோ) டென்ஷனை ரிலீஸ் ஆக்கும்

தோட்ட வேலைகளில் மண்ணைக் கொத்திக் கிளறி செடிகளை சீர் செய்தல் டென்ஷன் காணாமல் போகும்.

செல்லப் பிராணிகளின் மேல் கவனம் செலுத்துவதும் நல்லது.

பேசாமல் அமைதியுடன் இருப்பது வெகுவாக அழுத்தத்தைக் குறைக்கும்.

ஆன்மீகத்தில் நமக்கு பிடித்த கடவுளின் ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டிருந்தால் மனதின் படபடப்பு குறையும்.

டென்ஷன் ஆனால் சிலர் குளிப்பது வழக்கம் இதுவும் ஒரு நல்ல முறை தான் குளிர்ந்த நீர் உடலில் படும்போது நம் மனதில் இருக்கும் வெப்பமும் அணையும்.

ஒன்று முதல் நூறு வரை எண்ணுதலும் கண்களை மூடித் தூங்குவதும் டென்ஷனைப் போக்கும் .

எங்கே இருந்து தூரமாக உள்ள ஒரு மலை அல்லது இயற்கை சூழ்ந்த இடங்களில் சென்று இயற்கையை ரசிப்பது அழுத்தம் மறைய சிறந்த வழி.

வாழ்வது ஒருமுறை..அதில் அழுத்தம் இல்லாமல் வாழப் பழகுவோம் .
Previous Post Next Post