
நமது முன்னோர்களின் சமையலறையில் மசாலாவை போல, வைத்தியத்திற்கு தேவையான மூலிகைகளையும் வைத்திருந்தனர். அந்த வகையில் முக்கியமானது வெந்தயம்.
வெந்தயத்தில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, நியாசின், பொட்டாசியம், இரும்பு, ஆல்கலாய்டு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
வெந்தயம் சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது மேலும் குறிப்பாக கொழுப்பு புரதத்தை குறைக்க உதவுகிறது. அதேபோல் இதய நோய்க்கு வெந்தயம் ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதில் வெந்தயத்தில் உள்ள நார் சத்து இதய அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.
வெந்தயத்தில் பொட்டாசியம் உள்ளதால் இதயத் துடிப்பு மற்றும் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தயம் சாப்பிடுவதால் சர்க்கரை கட்டுக்குள் வரும். இதில் உள்ள அமினோ அமிலம் இன்சுலின் உற்பத்தியை தூண்டுகிறது.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கண்டிப்பாக வெந்தயம் சாப்பிட வேண்டும். இதில் உள்ள அமிலம் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும். அதேபோல் கர்ப்பப்பை சுருங்குதலை வெந்தயம் ஊக்குவிப்பதால் பிரசவ வலியை குறைத்து குழந்தை பிறப்பை தூண்டும்.
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் காய்ச்சல் உணவு உடல் சூடு மற்றும் மனநிலை மாற்றத்தை சாந்தப்படுத்தும் உணவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்துக் கொண்டால் நெஞ்செரிச்சலுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிட்டால் அதில் உள்ள இயற்கையான கரையக்கூடிய நார் சத்துக்கள் பசியை அடக்கி விடும். ஊற வைத்த சுத்தமான வெந்தயத்தில் இருந்து செய்யப்பட்ட பேஸ்ட்டை சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம்.
உடல் சூட்டால் வாய் முழுவதும் புண்கள் தோன்றும் பொழுது, வெந்தயத்தை வாயில் போட்டு மெல்ல கடித்து உண்பதால் வாய்ப்புண் குறையும்.
No comments:
Post a Comment