Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 11, 2023

நம் முன்னோர்கள் சொன்ன பாட்டி வைத்தியம் தொகுப்பு ஒர் பார்வை..!

1. மாம்பழம்:

முக்கனிகளில் முதன்மையானது. இதில் உயிர்சத்து 'A' உள்ளதால் நல்ல கண் ஒளி தருகிறது.

இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதினால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்.

2. வாழைப்பழம்:

தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது.

3. முகம் வழுவழுப்பாக இருக்க:

கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகுமுன் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி பொலிவு தரும்.

4. இரத்த சோகையை போக்க:

பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும்.

5. கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது:

தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

6. குழந்தைகளுக்கு:

குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுங்கள். கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

7. உடல் சக்தி பெற:

இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.

8. வெட்டுக்காயம் குணமாக:

நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.

9. சுகப்பிரவசமாக:

ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

10. உடல் அரிப்பு குணம் பெற:

வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.

11. காதில் சீழ்வடிதல் குணமாக:

வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.

12. நெஞ்சுவலி குணமாக:

அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திப்பழம் இருதயத்தை பலப்படுத்துகிறது.

13. சிலந்தி கடிக்கு மருந்து:

தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும்.

14. சீதபேதி குணமாக:

புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிடி சீதபேதி குணமாகும்.

15. வயிற்று நோய் குணமாக:

சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிடி வயிற்று நோய் குணமாகும்.

16. காது வலி குணமாக:

வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.

17. நுரையீரல் குணமாக:

நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து போத்தலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.

18. பேதி குணமாக:

மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும்.

19. வாதநோய் குணமாக:

குப்பைமேனி இலை சாறு எடுத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

20. மலச்சிக்கல் சரியாக:

அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

21. மேகரோகம் குணமாக:

ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.

22. நீரழிவு நோய் குணமாக:

மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 1 கரண்டி வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.

23. இரத்த பேதியை குணப்படுத்த:

அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை ஆகியவற்றை சமஅளவு பொடிசெய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீத பேதி குணமாகும்.

24. மூட்டுவலி குணமாக:

அத்திப்பாலை பற்று போட்டு வர மூட்டு வலி குணமாகும்.

25. நரம்பு தளர்ச்சி நீங்க:

தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

26. பற்கள் உறுதியாக இருக்க:

மாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.

27. சேற்றுபுண் குணமாக:

சிலரு‌க்கு மழை‌க்கால‌த்‌திலு‌ம், பலரு‌க்கு எ‌ப்போதுமே கா‌லி‌ல் சே‌ற்று‌ப் பு‌ண் ஏ‌ற்படு‌கிறது. எ‌ப்போது‌ம் த‌ண்‌ணீ‌ரி‌ல் ‌நி‌ன்று கொ‌ண்டு வேலை செ‌ய்பவ‌ர்களு‌க்கு சே‌ற்று‌ப் பு‌ண் ஏ‌ற்படு‌கிறது.அதாவது விளக்கெண்ணெயில் மஞ்சள் தூளைக் குழைத்து, சேற்றுப் புண்களில் தடவ ‌விரை‌வி‌ல் குணம் கிடைக்கும்..

காய்ச்சிய வேப்பெண்ணெய் தடவி வர சேற்று புண் குணமாகும்.

சே‌ற்று‌ப் பு‌ண்ணை‌த் த‌வி‌ர்‌க்க மருதா‌ணி ந‌ல்ல மரு‌ந்தாக உதவு‌கிறது. மருதா‌ணி இலையுட‌ன் ம‌ஞ்சளை சே‌ர்‌த்து அரை‌த்து இர‌வி‌ல் சே‌ற்று‌ப் பு‌ண் உ‌ள்ள இட‌ங்க‌ளி‌ல் ப‌ற்று‌ப் போ‌ல் போ‌ட்டு ‌விடு‌ங்க‌ள். ‌மிகவு‌ம் கு‌ளி‌ர்‌ச்‌சியான உட‌ல் அமை‌ப்பை‌க் கொ‌ண்டவ‌ர்க‌ள் லேசாக‌த் த‌ட‌வி‌க் கொ‌ண்டா‌ல் போது‌ம். ஏனெ‌னி‌ல் மருதா‌ணி உடலு‌க்கு கு‌ளி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம். காலை‌யி‌ல் எழு‌ந்து த‌ண்‌ணீ‌ர் கொ‌ண்டு கழு‌வி ‌விடவு‌ம். இ‌வ்வாறு மூ‌ன்று நா‌ட்க‌ள் செ‌ய்து வ‌ந்தா‌ல் சே‌ற்று‌ப்பு‌ண் குணமா‌கி‌விடு‌ம். மேலு‌ம் சே‌ற்று‌ப்பு‌ண் வராம‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், த‌ண்‌ணீ‌ரி‌ல் ‌நி‌ன்று வேலை செ‌ய்யு‌ம் போது கா‌லி‌ல் ‌சி‌றிது தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை‌த் தட‌வி‌க் கொ‌ள்ளவு‌ம்.இ‌வ்வாறு செ‌ய்தா‌ல் ‌நிர‌ந்தரமாக சே‌ற்று‌ப்பு‌ண் வராம‌ல் தடு‌க்கலா‌ம்.

28. மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த:

வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400 மில்லி, அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை நாள்தோறும் 1 கரண்டி வீதம் ஆறு நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

29. வயிற்றுவலி குணமாக:

குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.

30. வயிற்று பூச்சிகள் ஒழிய:

வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் 1 கரண்டி தேன் சேர்த்து கலக்கி காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட வயிற்று பூச்சிகள் தொந்தரவு இராது.

31. மலச்சிக்கல் தீர:

பேயன் வாழைப்பழம் தோலுடன் பில்லையாக நறுக்கி பனங்கல்கண்டு சேர்த்து ஆமணக்கு எண்ணெய்யில் ஊற வைக்கவும் போத்தலை அன்றாடம் வெயிலில் வைக்கவும். 3 நாட்கள் ஊறிய பின் தினசரி 1 வில்லை எண்ணெய்யுடன் உட்கொள்ளவும். மலச்சிக்கல் தீரும்

32. குழந்தைகளுக்கு கண் சூடுதனிய:

நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர கண்சூடு குணமாகும்.

33. இரத்தத்தை சுத்தப்படுத்த:

இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.

34. கக்குவான் இருமல் குணமாக:

நாயுறுவி கதிர், 1 சீயக்காய், 1 மஞ்சள் துண்டு சேர்த்து அரைத்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி கொதித்தவுடன் இறக்கி வைத்து கொள்ளவும். காலை, மாலை 1/2 டம்ளர் கொடுக்க குணமாகும்.

35. இரத்தம் உறைதல் குணமாக:

நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் உறைவதை தடுக்கலாம்.

36. சொறி சிரங்கு குணமாக:

கீழாநெல்லி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்க சொறி சிரங்கு குணமாகும்.

37. சளி மூக்கடைப்பு தீர:

கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு குணமாகும்.

38. தலைவலி குணமாக:

குப்பைமேனி சாறு தடவ தலைவலி குணமாகும்.

39. இரத்த கொதிப்பு குணமாக:

அகத்தி கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வர இரத்த கொதிப்பு ஏற்படாது.

40. கண்வலி வராமல் தடுக்க:

எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும். எத்தனை பூக்கள் விழுங்குகின்றமோ அத்தனை வருடம் கண்வலி வராது.

41. தொண்டை கரகரப்பு நீங்க:

பூவரசன் வேர், பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.

42. குடல்புண் குணமாக:

மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

43. கால்பித்த வெடிப்பு:

அரசமரத்து பாலை பித்தவெடிப்பு மீது தடவிவர குணமாகும்.

44. இரத்தம் சுத்தமாக:

தினசரி இலந்தை பழம் சாப்பிடுங்கள். இலந்தை பழம் இரத்தத்தை சுத்திகரித்து சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு உண்டாகும். பசியை தூண்டும்

45. முடிவளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வரவும். தலைமுடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் வளர்ந்து வரும்.

46. செருப்புக்கடி குணமாக:

தென்னை ஓலையை தனலில் போட்டு கருக்கி பட்டு போல தூள் செய்து தேங்காய் எண்ணெய்யில குழப்பி பூசி வந்தால் மூன்றே நாளில் குணமாகும்.

47. கருப்பு முடியாக மாற்ற:

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வதை தடுக்கும்.

48. தொழுநோய் குணமாக:

கடுக்காய் வேர், பட்டை இலை, பூ உலர்த்தி இடித்து சலித்து காலை, மாலை 1/2 கரண்டி பசும்பாலில் கலந்து உண்டு வர தொழுநோய் குணமாகும்.

49. பல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக:

ஆலமரத்து பட்டையை பட்டு போல் பொடி செய்து வைத்து கொள்ளவும். வெந்நீரில் கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து 3 மாதம் சாப்பிட்டு வர பல் நோய் நீங்கும். பல் ஆட்டம், ஈறுகளின் தேய்மானம் தீரும். பல் கூச்சம், வாய் நாற்றம் விலகும்.

50. சதை போடுவது குறைக்க:

வாழை தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் பெருக்கம் குறையும். உடல் அழகு பெறும்.

51. தூக்கம் வர:

வெங்காயத்தை நசுக்கி அதன் விந்தை 1 சொட்டு கண்ணில் விட்டால் போதும். தூக்கம் வரும்.

52. உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற:

உடலில் கெட்ட நீர் உள்ளவர்கள் தினசரி பப்பாளிக் காயை சாப்பிட்டு வர துர்நீர் சிறுநீரின் வழியாகவும் வியர்வையின் வழியாகவும் வெளியேறும்.

53. கண்கள் குளிர்ச்சி:

கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காயவைத்து பவுடராக்கி பாட்டிலில் வைத்து கொள்ளவும். தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை சக்தி அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும். சளியினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.

54. வாந்தியை நிறுத்த:

துளசி சாறு, கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும்.

55. பித்த வாந்தியை நிறுத்த:

வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.

56. வயிற்று கடுப்பு நீங்க:

அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

57. மந்தம் அஜீரணம் குணமாக:

கருவேப்பிலையை உலர்த்தி பொடி செய்து மிளகு, சுக்கு, சீரகம், உப்பு பொடியாக்கி கலந்து வைத்துக் கொள்ளவும். சோற்றுடன் 1 கரண்டி பவுடர் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மந்தம் நீங்கும், மலக்கட்டு நீங்கும்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

58. சிறு நீர் எரிச்சல் குணமாக:

அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

59. வாய் நாற்றம் போக:

நெல்லி, முள்ளி. தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடி நீரில் ஊறவைத்து காலையில் இந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்கவும். இதனால் வாய் நாற்றம் தீரும்.

60. சர்க்கரை வியாதி நீங்க:

கோவை பழம் தினசரி 1 சாப்பிட்டு வர சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

61. தோல் வளம் பெற:

ஆலமரத்து பட்டைகளை பட்டுபோல் அரைத்து வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து வாரம் 1 முறை பருகி வந்தால் சரும நோய் வராது. தோலும் வளம்பெறும்.

62. வயிற்றுப்புண்:

வாழைப்பூவை, வாரம் ஒரு நாள் கூட்டாக செய்து சாப்பிட, வயிற்றுப்புண் வராது. வாழைப்பூ, கருப்பை கோளாறுகளை நீக்கும் தன்மை கொண்டது.

63. வரட்டு இருமல் தனிய:

எலுமிச்சம் பழச்சாறு தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

64. கருப்பை கோளாறு நீங்க:

அரசஇலை கொழுந்து 10 - 20 எடுத்து அரைத்து மோருடன் பருகி வர கருப்பையில் தங்கிய அழுக்குகள், அடைப்புகள், கட்டிகள், கிருமிகள், சதை வளர்ச்சி ஆகியவை தூய்மை அடையும்.

65. கல்லீரல் நோய்கள் நீங்க:

கல்லீரல் நோய்களை துளசிச் சாறு குணப்படுத்துகிறது.

No comments:

Post a Comment