பால் டீ, பிளாக் டீயை விட இன்று கிரீன் டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலானோர் உடலில் கலோரி அதிகம் சேராமல் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற முனைப்பில் கிரீன் டீயை பயன்படுத்துவதாகத் தெரிவிக்கின்றனர். மேலும், இதில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.
ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன. எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிரீன் டீயின் நன்மைகள்
1. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
2. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
3. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
4. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.
5. இதய நோய் வராமல் தடுக்கிறது.
6. ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
7. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.
8. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
9. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.
10. எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.
11. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.
12. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
13. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
14. சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.
15. பருக்கள் வராமல் தடுக்கிறது.
15. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.
16. மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.
17. உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.
கிரீன் டீ குடிப்பதால் பல உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படுகின்றன என்று நிபுணர்கள் தெரிவிகின்றனர்.
வயிற்றுக்கோளாறுகள்
வெறும் வயிற்றில் அதிகமாக கிரீன் டீ குடிப்பது வயிற்றுக்கோளாறுகளை ஏற்படுத்தும். சிலர் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறு.
வெறும் வயிற்றில் குடிப்பதால் நெஞ்செரிச்சல், வயிற்றில் அமிலச் சுரப்பு, செரிமானப் பிரச்னை, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அல்சர் இருப்பவர்கள் கிரீன் டீ அருந்துவதை தவிர்க்க வேண்டும். எந்த டீ குடித்தாலும் முன்னதாக ஒரு தம்ளர் தண்ணீர் அருந்திவிட்டு சில நிமிடங்களுக்குப் பிறகு டீ அருந்துவது நல்லது.
தலைவலி
டீ குடிப்பதால் தலைவலி மறையும் என்று சொல்லக் கேட்டிருப்போம், ஏன் தலைவலிக்கு எளிய தீர்வாக பெரும்பாலானோருக்கு டீ உள்ளது. ஆனால், அதிக கிரீன் டீ குடிப்பது தலைவலியை ஏற்படுத்தும் சில நேரங்களில் தலைச்சுற்றலும் ஏற்படலாம்.
தூக்கமின்மை
கிரீன் டீயில் தூக்கத்திற்கு எதிரான ஒரு கலவை உள்ளது. கிரீன் டீயில் உள்ள ரசாயனக் கலவைகள் தூக்கத்திற்கு உதவும் மெலடோனின் போன்ற ஹார்மோன் சுரப்புகளை கட்டுப்படுத்துவதால் தூக்கக் கோளாறுகளை ஏற்படுகிறது. கிரீன் டீயில் எல்-தியானைன் என்ற ரசாயனம் விழிப்புணர்வையும் கவனத்தையும் அதிகரிக்கிறது. இது சில நபர்களின் தூக்கத்தை சீர்குலைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, உறங்குவதற்கு 5 மணி நேரத்திற்கு முன்னதாக மட்டுமே டீயை அருந்த வேண்டும்.
இரும்புச்சத்து குறைபாடு
கிரீன் டீயின் மற்றொரு பக்க விளைவு என்னவென்றால், இதை அதிக அளவில் குடிப்பதால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும். அதாவது உடல் இரும்புச்சத்தை உறிஞ்சும் திறனை இழக்கிறது.
வாந்தி, குமட்டல்
கிரீன் டீ அதிகமாக குடித்தால் குமட்டல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். ஏனென்றால், கிரீன் டீயில் டானின்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன.
கிரீன் டீ குடிக்கலாமா? எவ்வளவு குடிக்க வேண்டும்?
கிரீன் டீ குடிக்கலாம். எதையுமே அளவோடு சாப்பிட்டால் விளைவுகள் அதிகமிருக்காது. கிரீன் டீயை அதிக அளவு குடிப்பதால் மட்டும் பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது நாள் ஒன்றுக்கு 2 கப்-க்கும் மேல் டீ அருந்தினால் மேற்குறிப்பிட்ட விளைவுகள் ஏதேனும் ஏற்படலாம். அளவாக நாள் ஒன்றுக்கு காலை, மாலை என இரு வேளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் வெறும் வயிற்றில் பசிக்கும்போது அருந்தக்கூடாது. சாப்பிடுவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்னதாகவும், தூங்குவதற்கு 5 மணி நேரத்திற்கு முன்னதாகவும் அருந்த வேண்டும். கிரீன் டீயை அப்படியே அருந்தாமல் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து குடிக்கலாம். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, கிரீன் டீயின் பக்க விளைவுகளை குறைக்கிறது. குறிப்பிட்ட அளவில் மட்டுமே கிரீன் டீயை அருந்தினால் அதன் நன்மைகளை மட்டும் பெறலாம்.
Tags:
உடல் நலம்