இப்போது எல்லாம் அனைவருக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக நெஞ்சு சளி உள்ளது.
நெஞ்சு சளி ஏற்படுவதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது சிலருக்கு ஆஸ்துமா ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த பிரச்சனை அதிக அளவில் குழந்தைகளுக்கு உள்ளது. இதற்கு அதிக அளவில் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் பல பின் விளைவுகள் ஏற்படும் அதனை தடுக்க இயற்கை முறையில் கசாயம் குடிப்பது மிக நல்லதாகும். மேலும் சளி ஏற்பட்டால் சளி மட்டும் இருக்காது அதனுடன் தொண்டை வலி மூக்கடைப்பு தலைபாரம் போன்ற பிரச்சனைகள் இருக்கும் இதற்கு எல்லாம் ஒரு தீர்வு கசாயம்.
நமக்கு ஏற்படும் சளி, இருமல் நோய்த் தொற்றுகளை குணப்படுத்த ஒரு சிறப்பான கஷாயம் ஒன்றை தயார் செய்து குணப்படுத்தும் . வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஒரு கசாயம் செய்து குடித்தால் சளி பிரச்சனை முழுவதுமாக குணமடையும்.
தேவைப்படும் பொருட்கள்
சீரகம்
மஞ்சள் தூள்
பனங்கற்கண்டு
மிளகு
மல்லி
துளசி
திப்பிலி
ஓமவல்லி இலை
வெற்றிலை
செய்முறை
அடுப்பை பற்ற வைத்து பாத்திரம் வைத்து 500 மிலி அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் தேவையான பொருள்கள் அனைத்தையும் சேர்த்து இதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். எடுத்துள்ள 500 மிலி தண்ணீரானது 250 மிலி தண்ணீர் ஆகும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பிறகு இதை இறக்கு ஆற வைக்க வேண்டும்.
சூடு குறைந்த பிறகு இதை எடுத்து வடிகட்டி குடிக்கலாம். இந்த கஷாயத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் குடிக்கலாம். தொடர்ந்து மூன்று நாள் இந்த கஷாயத்தை குடித்து வந்தால் சளி இருமல் சரியாகும்.
Tags:
உடல் நலம்