Saturday, June 17, 2023

எடையை குறைக்க எளிய வழிகள்!

டல் உழைப்பு குறைந்துவிட்ட நிலையில், அதிகரித்துவிட்ட எடையைக் குறைக்க பெரும்பாலானோர் துடிக்கின்றனர்.

உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா உள்பட பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால், சுவையைத் தியாகம் செய்து, சாப்பிடுவதுதான் என்று சிலர் நினைத்துகொண்டிருக்கின்றனர். 

உண்மையில் நமது பயன்பாட்டில் உள்ள பொருள்களை வைத்தே, எடை குறைப்பை செய்ய முடியும். பச்சைப் பயிறு எடை குறைப்புக்கு அருமருந்து.

நார்ச் சத்து, புரதச் சத்து கொண்டது. இரும்புச் சத்தும் உள்ளதால், நல்ல ஊட்டம் கொடுக்கும். மேலும், எலும்புக்குத் தேவையான கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் ஆகியவை உள்ளன. அதுவும் முளை கட்டிய பயிறாக இருந்தால் ரொம்ப நல்லது.

அதனுடன் பொடிப் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. 

மாதுளம் பழ முத்துகள் ஒரு கிண்ணம், வால் நட் அரை கிண்ணம், தக்காளி ஒன்று ஆகியவற்றுடன் மிளகுப் பொடி, கிள்ளிய கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, நன்றாகப் புரட்டிவிட்டு, தேக்கரண்டி உதவியுடன் சாப்பிட்டால் அலாதி சுவை. இதற்கு மாற்றாக, பயிறுக்குப் பதில் வெள்ளரிக்காய்க்கு முக்கியம் கொடுக்கும் வகையில் நறுக்கி, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகுப் பொடி, கொஞ்சம் தயிர், போதுமான உப்பு கலந்து நன்கு நிரவி சாப்பிட்டாலும் உடல் எடை குறைப்புக்கு நிச்சயம் உதவும். 

மாக்ரோணி சாலட் (இது ஒரு கோதுமை உணவு பொருள்) , வெள்ளை வேக வைத்த கொண்டைக் கடலை, பொடியாக நறுக்கப்பட்ட தக்காளி, வேக வைத்த சோளம், முட்டைக் கோஸ், பச்சை மிளகாய், நீளமாய் நறுக்கப்பட்ட வெங்காயம், ஒரு தேக்கரண்டி தயிர் ஆகியவற்றை நன்கு கலந்து சாப்பிட்டாலும் எடை குறையும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News