Saturday, April 22, 2023

பேரறிஞர் அண்ணா (அண்ணாத்துரை)

பெயர் பேரறிஞர் அண்ணா (அண்ணாத்துரை)
காலம் 1909-1969
பிறப்பு காஞ்சிபுரம்

அறிஞர் அண்ணா சென்னை பச்சையப்பன் கல்லூரில் தனது எம்.ஏ பட்டத்தை முடித்தார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஆவார். அண்ணா நீதிக்கட்சியின் வாயிலாக அரசியலில் நுழைந்தார். சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற தாக்கமே இவரை நீதிக் கட்சியில் இணைய வைத்தது. அண்ணா ஒரு சிறந்த பேச்சாளர். அக்காலத்தில் புகழ் பெற்ற பேச்சாளராய்த் திகழ்ந்தார். நீதிக்கட்சியில் இணைந்தபோது பெரியாரின் தலைமையின் கீழ் பணிபுரியும் பாக்கியம் கிடைத்தது. 1944-ல் சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி பெயரை “திராவிட கழகம்” என மாற்றினார். இதன் மூலம் பெரியாருக்கு நெருக்கமானார். 1947-ம் ஆண்டு நடைபெற்ற பெரியாரின் கொள்கைக்கு எதிராக 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் நாள் திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இவர் 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, அண்ணா தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். சித்திரை முதல் தேதியை தமிழ் புதுவருட நாளாக அறிவித்தார் (14.04.1967). 1967-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் நாள் சென்னை மாநிலம் என்பதை தமிழக அரசு அல்லது தமிழகம் எனப் பெயர் மாற்றம் செய்தார். “சத்யமேவ ஜெயதே” என்ற அரசுக் குறிக்கோளை “வாய்மையே வெல்லும்” என மாற்றி அமைத்தார். புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள “செக்ரடேரியட்” என்பதை “தலைமைச் செயலகம்” எனப் பெயர் மாற்றம் செய்தார். ஸ்ரீ.ஸ்ரீமதி மற்றும் குமாரி போன்ற சமஸ்கிருத வார்த்தைகளுக்கு மாற்றாக திரு.திருமதி மற்றும் செல்வி என்ற தமிழ்ச் சொற்களை அறிவித்தார். அண்ணாவின் தலைமைப்பண்பு, நிர்வாக நேர்மை, அரசியல் பண்பாடு ஆகியவற்றைச் சிறப்பிக்கும் வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1968 ஆம் ஆண்டு கெளரவ டாக்டர் பட்டம் அளித்து அண்ணாவைப் பாராட்டியது. 2009 ஆம் ஆண்டு நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. 2010ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவு படுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.
இத்தகைய பெருமைமிகு அண்ணாதுரை பிப்ரவரி 3, 1969-ம் ஆண்டு இயற்கை எய்தினார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News