Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 15, 2021

இந்தியாவில் பணம் எவ்வாறு அச்சடிக்கப்படுகிறது?

  • இந்தியாவில் 1917-ல் தான் முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுக்கள் தயாரித்து வெளியிடப்பட்டது.
  • 1935-ல் பணப் பொறுப்புகள் அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்தது.
  • 1947-ம் ஆண்டுவரை ஆறாம் ஜார்ஜின் உருவம் பொறித்த பணமே புழக்கத்தில் இருந்தது.
  • ஆங்கிலேய அரசு, 1925ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் ஒரு அச்சகத்தை அமைத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க தொடங்கியது.
  • மத்தியபிரதேசத்தில் உள்ள தேவாஸில் (Security Printing and Minting Corporation of India Ltd.,) 1974-ல் ஓர் அச்சகம் தொடங்கப்பட்டது.
  • இந்த இரு அச்சகங்களைத் தவிர, 1990களில் கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரிலும், மேற்கு வங்கத்தில் உள்ள சல்பானியிலும் ரூபாய் மற்றும் வங்கிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அச்சடிக்க இயலும் இரு அச்சகங்களை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியது.

No comments:

Post a Comment