Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 10, 2021

NEET - இயற்பியல் - துகள்களின் அமைப்பு மற்றும் சுழல் இயக்கம்

1.        1 m ஆரமும் 50 kg நிறையும் உடைய ஒரு வட்ட மேஜையில் 1 m  உயரமுள்ள நான்கு கால்கள் சமச்சீராக அதன் சுற்றளவில் பொருத்தப்பட்டு உள்ளது. மேஜை சரியாதவாறு மேஜையின் எந்தவொருப் புள்ளியிலும் வைக்கப்படக்கூடிய பெரும நிறை.

A)        110 kg

B)         140.2 kg

C)         120.8 kg

D)        80.4 kg

2.        மூன்று நிறைகள் 2 kg,4 kg மற்றும் 6kg ஆகியவை XY தளத்தில் முறையே (0,0),(0,2) மற்றும் (2,2) ஆயத் தொலைவுகளில் வைக்கப்பட்டுள்ளன. நிறைகளின் மையத்தின் ஆயத் தொலைவு.

A)        (1,1.67)

B)         (1,2)

C)         (2,1.67)

D)        (2,0.67)

3.        இரு வட்டத் தகடுகள் ஒரே பொருளாலானது மற்றும் ஒரே நிறையுடையது. அவற்றின் தடிமன்கள் விகிதம் 1:3 எனில் அவற்றின் நிலைமத்திருப்புத் திறன்களின் விகிதம்.

A)        3:1

B)         1:3

C)         1:9

D)        1:3

4.        r  மற்றும் k  என்பன உருளும் பொருள் ஒன்றின் ஆரம் மற்றும் சுழற்சி ஆரம் ஆகியவற்றை குறிக்கிறது எனில் அதன் சுழற்சி இயக்க ஆற்றலுக்கும் மொத்த ஆற்றலுக்கும் இடையேயான விகிதம்.

A)        k2 : r2

B)         (k2+r2) : r2

C)         r2 : (k2+r2)

D)        k2 : (k2+r2)

5.        ஒரு திடக்கோளம் h உயரமுடைய சாய்தளத்திலிருந்து சறுக்காமல் உருண்டு கீழ் நோக்கி வருகிறது.சாய்தளத்தின் அடிப்பாகத்தை அடையும் போது கோளத்தின் திசைவேகம்.

A)        gh

B)         10 / 7gh

C)         7 / 10gh

D)        10 / 3gh

6.        9M  நிறையும் R ஆரமுடைய வட்டத் தகட்டிலிருந்து R3 ஆரமுடைய இரு சிறு வட்டத் தகடுகள் படத்தில் காட்டியவாறு நீக்கப்படுகின்றன. மீதமுள்ள பொருளுக்கு மையம் O  வழியாக தகட்டின் தளத்திற்கு செங்குத்தாகச் செல்லும் அச்சைப் பற்றிய நிலைமத் திருப்புத் திறன்.




            A)        8 / 5MR2

B)         7 / 2MR2

C)         4 MR2

D)        5 / 2MR2

7.         ஃ பிளைவில் ஒன்றின் கோணத் திசைவேகம் காலத்தைச் சார்ந்து ω=p−qt என மாறுகிறது. இதில் P  மற்றும் q  என்பவை மாறிலிகள்.ஓய்வுக்கு வரும் முன் திரும்பும் கோணம்.

A)        q /p

B)         p2 / 2q

C)         q2 / 2p

D)        p / q

8.        ஒரு சமச்சீரான M  நிறையுடைய மெல்லிய சதுரவடிவத் தகடு இரு சமபக்க முக்கோணங்களை உள்ளடக்கியதாக படத்தில் காட்டியபடி உள்ளது.தகட்டின் நிறை மையத்தின் வழியே தகட்டின் தளத்திற்கு செங்குத்தாகச் செல்லும் அச்சைப் பற்றிய நிலைமத் திருப்புத் திறன் 2.4 Ma2 மையம் ஓ வின் வழியே இரு முனைகளையும் இணைக்கும் கோட்டிற்கு இணையாக ஒரு உச்சி வழியாக செல்லும் AB  என்ற அச்சைப் பொருத்த நிலைமத் திருப்புத்திறன்.



            A)        8.67 Ma2

B)         6.4 Ma2

C)         4.2 Ma2

D)        2.4 Ma2

9.        4×10−3kgm2நிலைமத்  திருப்புத் திறன் கொண்ட ஒரு சக்கரம் விநாடிக்கு  10 சுற்றுகள் வீதம் சுற்றுகிறது.5 விநாடிகள் அதனை நிறுத்துவதற்குத் தேவையான திருப்பு விசை.

A)        2π×10−3Nm

B)         8π×10−3Nm

C)         16π×10−3Nm

D)        8×10−3Nm

10.      ஒவ்வொன்றும் 0.1 m ஆரமும் 1 kg நிறையும் கொண்ட நான்கு கோளங்கள் 0.4 m பக்கமுடைய சதுரத்தின் நான்கு மூலைகளிலும் அவற்றின் மையங்கள் வரும்படி வைக்கப்படுகின்றன. எந்தவொரு மூலைவிட்டத்தைப் பொருத்து இந்த அமைப்பின் நிலைமத் திருப்புத்திறன்.

A)        2.8×10−2kgm2

B)         1.4×10−2kgm2

C)         9.6×10−2kgm2

D)        2×10−2kgm2

No comments:

Post a Comment