ஐம்பெரும் காப்பியம் - சிலப்பதிகாரம் - THAMIZHKADAL.IN

Post Top Ad

Thursday, June 10, 2021

ஐம்பெரும் காப்பியம் - சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரத்தின் உருவம்:
 • ஆசிரியர்   = இளங்கோவடிகள்
 • காலம் = கி.பி.2ஆம் நூற்றாண்டு
 • அடிகள் = 5001
 • காதைகள்     = 30
 • காண்டங்கள்   = 3
 • பாவகை  = நிலைமண்டிலஆசிரியப்பா
 • சமயம் = சமணம்
உரைகள்:
 • அரும்பதங்களுக்கு மட்டும் உரை எழுதியவர்அரும்பத உரைகாரர்.
 • அடியார்க்குநல்லாரின் உரை
 • ந.மு.வேங்கடசாமிநாட்டார் உரை
ஆசிரியர் குறிப்பு:
 • பெயர்            = இளங்கோவடிகள்
 • பெற்றோர்      = இமயவரம்பன்நெடுஞ்சேரலாதன்சோழன் மகள் நற்சோனை
 • அண்ணன்      = சேரன் செங்குட்டுவன்
 • இவர் இளமையிலே துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் என்னும் இடத்தில தங்கினார்.
நூலின் வேறு பெயர்கள்:
 • தமிழின் முதல் காப்பியம்
 • உரையிடையிட்டபாட்டைச் செய்யுள்
 • முத்தமிழ்க்காப்பியம்
 • முதன்மைக் காப்பியம்
 • பத்தினிக் காப்பியம்
 • நாடகப் காப்பியம்
 • குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ)
 • புதுமைக் காப்பியம்
 • பொதுமைக் காப்பியம்
 • ஒற்றுமைக் காப்பியம்
 • ஒருமைப்பாட்டுக் காப்பியம்
 • தமிழ்த்தேசியக் காப்பியம்
 • மூவேந்தர் காப்பியம்
 • வரலாற்றுக் காப்பியம்
 • போராட்ட காப்பியம்
 • புரட்சிக்காப்பியம்
 • சிறப்பதிகாரம்(உ.வே.சா)
 • பைந்தமிழ் காப்பியம்
நூல் அமைப்பு:
 • காண்டங்கள்      = 3(புகர்ர் காண்டம்மதுரைக் காண்டம்வஞ்சிக் காண்டம்)
 • காதைகள்     = 30
 • முதல் காதை = மங்கலவாழ்த்துப்பாடல்
 • இறுதி காதை  = வரந்தருகாதை
புகார் காண்டம்:
 • புகார் காண்டத்தில் உள்ள காதைகள் = 10
 • முதல் காதை = மங்கல வாழ்த்துப் பாடல் காதை
 • பத்தாவது காதை = நாடுகாண் காதை
மதுரைக் காண்டம்:
 • மதுரைக்காண்டத்தில் உள்ள காதை = 13
 • 11வது காதை = காடுகாண் காதை
 • 23வது காதை = கட்டுரைக் காதை
வஞ்சிக் காண்டம்:
 • வஞ்சிக்காண்டத்தில் உள்ள காதை = 7
 • 24வது காதை = குன்றக்குரவை காதை
 • 30வது காதை = வரந்தருகாதை
நூல் எழுந்த வரலாறு:
 • மலைவளம் காண சென்ற இளங்கோவடிகள்சேரன் செங்குட்டுவன்சீத்தலைசாத்தனார்ஆகியோரிடம் அங்கு இருந்த மக்கள் ஒரு பெண் தெய்வத்தை பார்த்ததாக கூறினர்.
 • சீத்தலைசாத்தனார் தனக்கு அப்பெண்ணின் கதை தெரியும் என்று கூறிஅக்கதையை இளங்கோவடிகள் எழுதவேண்டும் எனக் கேட்டார்.
 • சீத்தலைச்சாதனார்ர்இளங்கோவடிகளை “முடிகெழுவேந்தர்மூவர்க்கும் உரியதுஅடிகள் நீரேஅருளுக” என வேண்டிக்கொண்டார்.
 • இளங்கோவடிகளும், “நாட்டதும்யாமோர்பாட்டுடைச்செய்யுள்” எனக் கூறி சிலப்பதிகாரத்தைபடைத்தார்.
நூல் கூறும் மூன்று உண்மைகள்:
 • ஊழ்வினை உறுத்துவந்துஊட்டும்
 • அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
 • உரைசால்பத்தினிக்குஉயர்ந்தோர்ஏத்துவர்
கதை மாந்தர்கள்:
 • கோவலனின் தந்தை மாசாத்துவான்
 • கண்ணகியின் தந்தை மாநாய்கன்
 • கோவலனின் தோழன் மாடலன்
 • கண்ணகியின் தோழி தேவந்தி
 • மாதவியின் தோழி சுதமதிவயந்தமாலை
 • கோவலனுக்கும்மாதவிக்கும்பிறந்தவள் = மணிமேகலை
 • கண்ணகி கோவில் கட்டியவன்சேரன் செங்குட்டுவன்
 • கோவில் உள்ள இடம் திருவஞ்சிக்களம்(குமுளி)
 • சேரன் செங்குட்டுவன் போர் செய்த இடம் குயிலாலுவம்
சிறப்புகள்:
 • நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என பாரதியார் கூறுகிறார்.
 • சிலபதிகாரச்செய்யுளைக்கருதியும்........தமிழ்ச்சாதியைஅமரத்தன்மை வாய்ந்தது என்று உறுதி கொண்டிருந்தேன்” என கூறுகிறார் பாரதியார்.
 • யாமறிந்தபுலவரிலேகம்பனைப்போல்வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில்யாங்கணமேபிறந்ததில்லை” என்றார் பாரதியார்
 • முதன்முதலாகத் தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நூல் செய்தவர் இளங்கோவடிகள்” – மு.வரதராசனார்
 • பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் சிலப்பதிகாரம்
மேற்கோள்:
 • மாசறுபொன்னேவலம்புரி முத்தே
  காசறுவிரையேகரும்பேதேனே
  அரும்பெறல்பாவாய்ஆருயிர் மருந்தே
  பெருங்குடி வாணிகன் பெருமடமகளே
  இன்துணைமகளிர்க்குஇன்றியமையாக்
  கற்புக்கடம்பூண்டஇத்தெய்வம் அல்லது
  பொற்புடைத் தெய்வம்
 • பஃறுளியாற்றுடன்பன்மலைஅடுகத்துக்
  குமரிக்கோடும்கொடுங்கடல் கொள்ள

No comments:

Post a Comment

THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL

Post Top Ad