Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Saturday, October 12, 2024

இனி ஆயுசுக்கும் டாக்டர் பார்க்க தேவையில்லை!!





1)இருமல்

முள்ளங்கியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

2)தொண்டை கரகரப்பு

ஆடாதோடை இலையை வேகவைத்து சாறு பிழிந்து தேன் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு நீங்கும்.

3)இளைப்பு

ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி விஷ்ணுகிரந்தி பொடி சேர்த்து குடித்தால் இளைப்பு குணமாகும்.

4)கக்குவான் இருமல்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி சோடா உப்பு சேர்த்து கலக்கி குடித்தால் கக்குவான் இருமல் குணமாகும்.

5)பல் வலி

மாவிலை மற்றும் கொய்யா இலையை உலர்த்தி பொடியாக்கி சொத்தை பல்லில் வைத்தால் வலி குறையும்.

6)பேன்

அரளி பூவை தலையில் வைத்தால் பேன் ஒழியும்.வேப்பிலையை அரைத்து தலைக்கு பூசி குளித்து வந்தால் பேன்,ஈறு ஒழியும்.

7)குடற்புழு

பப்பாளி இலையை அரைத்து சாறு எடுத்து அருந்தி வந்தால் குடற்புழுக்கள் அனைத்தும் மலத்தில் வெளியேறிவிடும்.

8)இதய படபடப்பு

தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் இதய படபடப்பு நீங்கும்.எலுமிச்சை சாறு,சிவப்பு திராட்சை சாறு அருந்தி வந்தால் இதய வலி குணமாகும்.

9)நுரையீரல் சளி

பூண்டு பல்லை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் நுரையிலில் தேங்கிய சளி முழுமையாக கரைந்துவிடும்.

10)காய்ச்சல்

சுக்கு,துளசி,கற்பூரவள்ளி இலையை ஒரு கப் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து குடித்தால் காய்ச்சல் குணமாகும்.

11)பல்லரணை

பிராயன் பாலை பல் ஈறுகளில் அப்ளை செய்தால் பல்லரணை பிரச்சனை சரியாகும்.

12)கண் எரிச்சல்

தினமும் கண்களை சுற்றி விளக்கெண்ணெய் அப்ளை செய்து வந்தால் கண் எரிச்சல் நீங்கும்.அதேபோல் பிரஸ் கற்றாழை ஜெல்,தயிர் போன்றவற்றை கண்களை சுற்றி அப்ளை செய்து வந்தால் கண் எரிச்சல் குணமாகும்.