கணவன் இல்லை என்றால் மனைவி விதவை!! ஆனால் மனைவி இல்லை என்றால் கணவன் ஓர் அனாதை!!


மனமகிழ்ழ வைத்து கொள்ளுங்கள் உங்க மனைவியை..

ஒரு பெண்ணிற்கு இந்த உலகில் எவ்வளவு சந்தோஷங்கள் கிடைத்தாலும் அவள் தேடும் ஒரே சந்தோஷம் அவள் கணவனின் அன்பு மட்டுமே..!

ஒரு பெண்ணுக்கு மூன்று வேலை உணவும் உடுத்த உடையும் கொடுத்தால் போதும் அவள் வாழ்க்கைக்கு என்று சில கணவன்மார்கள் எண்ணம் இவை அனைத்தையும் இல்லாமல் ஒரு பெண் வாழ்ந்துவிடுவாள் ஆனால் கணவனின் அன்பு இல்லாமல் வாழமாட்டாள்..

உங்கள் மனைவியின் ஒரு சில தவறுகளை அடிக்கடி குத்தி காட்டாமல் அவளின் பல நல்ல செயல்களில் ஒன்றையாவது சில முறையாவது சொல்லி காட்டுங்கள்…அப்போதுதான் அவள் வாழும் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைக்கும்..

தனது அனைத்து சொந்த பந்தங்களையும் விட்டு வந்து தன் கணவனையே உலகமாக நினைக்கிறாள்…. நீங்கள் அவளை உலகமாக நினைக்க வேண்டாம். ஒரு உயிராக மதித்தாலே போதும் ஆண்களே…… அவள் உலகமே தன் காலடியில் இருப்பது போல எண்ணிக் கொள்வாள்.

மனைவியிடம் உன் கவுரவத்தைக் காட்டாதே அவள் உன்னை மட்டுமே நம்பிவந்தவள் உன் உறவுகளை அல்ல ""என் சொத்து., என் சம்பாத்தியம்.,என் இஷ்டம் என்றால் அவள் யார்.? உன்னுடன் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன.?

அவளுக்கென்று சிறு சிறு ஆசைகள் சந்தோசத்தை உன்னிடம் எதிர் பார்க்கக்கூடாதா.?
நான் நீ அல்ல நாம்..

மனைவி என்பவள் நம் வாழ்வின் பொக்கிஷம் இதை புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களால் மட்டுமே மனைவியின் மகத்துவத்தை உணர முடியும்..

யாராலும் மறுக்க முடியாத உண்மை கணவன் இல்லை என்றால் மனைவி விதவை தான் ஆனால் மனைவி இல்லை என்றால் கணவன் ஒரு அனாதை தான்..

மனைவியை தன் பெற்றோர், உறவுகள் வீடுகளுக்கு செல்ல விடாமல் தடுத்து வைத்து ஒரு அடிமையைப் போல் நடத்துபவர்களே!
அவளும் இரத்த பாசம் உள்ள ஒரு உயிர் என்பதை மறக்காதீர்கள்!
திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்திற்காக அவளது உறவுகளை பிரிக்கும் உரிமை கணவனுக்கு கிடையாது?.

ஒரு பெண் கணவனிடம் எதிர்ப்பார்பது காசு பணம் காரு பங்களா இல்லீங்க…எவ்வளவு சண்டை சச்சரவுகள் குடும்பத்தில் வந்தாலும் யாரிடமும் தன் மனைவியை விட்டு கொடுக்காமல் உனக்காக நான் இருக்கேன் கவலைபடாதே என்று ஆறுதலோடு அரவணைக்கும் கணவன் கிடைத்தாலே போதும் அவள் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக மனநிறைவோடு வாழ்வாள்…

உங்கள் மனைவியை ஒருபோதும்
வெறுத்து விடாதீர்கள்..!! ஏனென்றால் உங்களுடன் எவ்வளவு சண்டை போட்டாலும் உங்களை அதிகமாக நினைத்து கொண்டிருப்பவள் அவள் மட்டும் தான்..!!

பிரசவ வலியை விட கொடுமையானது கணவன் தன்னை புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் ஒரு பெண்ணுக்கு மிகவும் வலியை தரும்..

மனைவியை அடிக்கும் கணவன்மார்களே..! உங்கள் உயிரை சுமந்து தன்னுயிரை பணயம் வைத்து அவள் பட்ட பிரசவ வலியை நினைத்துப் பாருங்கள்.. அடிக்கவரும கை அந்த நிமிடமே அணைக்கமட்டுமே துடிக்கும்..

பெண்களின்…!!
அன்பை போலவே அவளின் வெறுப்பும் மிக ஆழமானது.. அன்பு காட்டியவர்கள் அவளை எட்டி உதைத்தாலும் ஏற்று கொள்வாள்.. ஆனால்..
அவள் வெறுத்தவிட்டவர்கள் கோடி கொட்டி கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டாள்..

மனமகிழ்ழ வைத்து கொள்ளுங்கள் உங்க மனைவியை
Previous Post Next Post