சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரி சிபிஎஸ்இ பள்ளியில் மாணவர்களே தங்களின் இரண்டாவது பெற்றோராகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் ஆசிரியர்களுக்கு உற்சாகத்துடன் விழா எடுத்தனர்.
இந்த விழாவில் மாணவர் தலைவர் காவியன் மற்றும் மாணவத் தலைவி தான்யா ஶ்ரீ மற்றும் இதர மாணவர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆசிரியர்களின் கடமைகளையும் அர்ப்பணிப்பையும் உணர்ந்து ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் கவிதை கூறி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இந்த விழாவின் தொகுப்பாளராக ஏழாம் வகுப்பு மாணவி.ரக்ஷிதா ஶ்ரீ, தர்சனா ஶ்ரீ பூரணி,டெலிஷா, ஆத்மிகா, சுருதிகா மற்றும் ஒருங்கிணைப்பாளராக பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள். சுந்தரேச ஹரி, துர்கேஷ், ஹேமாவதி, ஹரிசுதன், கோகுல், ஜீவன், ராகேஷ் பதினோராம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், ஹர்ஷன் பாண்டி மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் திவின், பிரபாகரன், கௌதம் துரை ஆகியோர் தங்கள் ஆசான்களின் அர்ப்பணிப்பை பாராட்டும் வகையில் விழாவை முன்னெடுத்தனர். தொடக்க நிகழ்வாக ஒருநாள் முதல்வராக இருந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவன்.ஜனகன் கொடியேற்றத்துடன் காலை இறைவணக்கக் கூட்டத்தை நடத்தினார்.
இன்றைய இறைவணக்கக் கூட்டம் ஆசிரியர்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
விழாவில் மாணவர்கள் தங்கள் மகிழ்ச்சியை பாடல், கலை, நடனம், பாடல்கள் மற்றும் உரையாடல்கள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக ஆசிரியர்களின் பெருமையினையும் புகழையும் மூலமாக பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் கையால் விருதுகள் வழங்கி கௌரவித்தது ஆசிரியர்களுக்கு மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியது. மேலும் ஆசிரியர்களுக்கு அவர்களது குழந்தைப் பருவத்தை நினைவு கூறும் வகையில் சிறு விளையாட்டுகள் நடத்தப்பட்டது. விழாவில் எட்டாம் வகுப்பு மாணவிகள் நடத்திய ஒலியற்ற நாடகம் (மைம்) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. முன்னதாக ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் பென்சில் ஓவியமாக வரைந்து பள்ளியின் தகவல் பலகையில் ஒட்டி ஆசிரியர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Tags:
கல்விச் செய்திகள்