தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு "எலக்ட்ரானிக்கல் கிட்".. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் சென்னை ஐஐடி மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை தூண்டும் விதமாக எலக்ட்ரானிக் கையடக்க மின்னணு பெட்டகத்தை வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் சென்னை ஐஐடியில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் தற்போது மாநில முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 253 அரசு பள்ளிகளை தேர்வு செய்து இந்த எலக்ட்ரானிக்கல் கிட்டை வழங்குவதற்கான பணிகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தலா 9 எலக்ட்ரானிக்கல் கிட் வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் 9-ம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் பாடத்திட்டங்களில் வரும் அனைத்து விதமான எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த திட்டங்களையும் பரிசோதனை செய்து கொள்ள முடியும்.‌

இதனை பயன்படுத்தி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிதாக பாடம் நடத்தலாம். இதில் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக்கல் சார்ந்த பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். இதற்காக சென்னை ஐஐடி வளாகத்திற்கு 4 குழுக்களாக ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 253 அரசு பள்ளிகளுக்கு எலக்ட்ரானிக்கல் கிட் வழங்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் இதனை வைத்து பரிசோதனை செய்வதற்காக வாரத்தில் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என சென்னை ஐஐடி அறிவுறுத்தியுள்ளது.
Previous Post Next Post