பப்பாளி சாறும் அது விரட்டும் பலவித நோய்களும்


பப்பாளியின் இலைகளின் அருமை பலருக்கும் தெரிவதில்லை.. அதனால்தான், பப்பாளியை பயன்படுத்தும் அளவுக்கு, அதன் இலைகளை பயன்படுத்துவதில்லை..

உண்மையை சொல்லப்போனால், பழத்தைவிட, இந்த இலைகள் நிறைய சத்துக்களை கொண்டிருக்கின்றன.

பப்பாளி இலையில், வைட்டமின் A,B,C,E,K , பப்பெய்ன், ஆல்கலாய்டுகள் போன்ற சத்துக்கள் உள்ளன.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும் திறன் இந்த இலைகளுக்கு உண்டு..

இந்த இலையிலுள்ள நார்ச்சத்து, புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் உணவை ஜீரணிக்க உதவுகிறது. அதே நேரத்தில், பப்பாளி இலைகளின் சாறு குடிப்பதால் மலச்சிக்கல், வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படாது... குடல் ஆரோக்கியம் காக்கப்படும்.

கர்ப்பிணிகளுக்கு இந்த பப்பாளி இலைகள் அருமருந்தாகும். குறிப்பாக, கர்ப்பபை சுருக்கங்களை இந்த இலைகள் குறைக்கின்றன.. பெண்களை தாக்கி வரும் PCOD என்று சொல்லப்படும் நீர்க்கட்டி பிரச்சனைகளையும் இந்த சரிசெய்கிறது.. எனவே, டாக்டர்களின் அறிவுரையை பெற்று இந்த இலையை பயன்படுத்தலாம்.

விஷக்காய்ச்சல்: பப்பாளி இலைகளை, அரைத்து ஜூஸ் செய்து சாப்பிடுவார்கள். அல்லது வெறும் சாறு எடுத்தும் மருந்தாக உட்கொள்ளலாம்... இந்த இலைகளை, விஷக்காய்ச்சலுக்கு மருந்தாக தருவார்கள்.. டெங்கு போன்ற கடுமையான காய்ச்சலுக்கு, உஷ்ணதன்மை வாய்ந்த இந்த பப்பாளி இலையே போதும்.. வீக்கம், நெஞ்செரிச்சல் போன்றவற்றையும் தீர்க்கக்கூடியது.

பப்பாளி இலையை சுத்தமான நீரில் அலசி, அதனை கைகளால் கசக்கி, சாறு எடுக்க வேண்டும். ஒரு பப்பாளி இலையிலிருந்து ஒரு டேபிள் ஸ்பூன் சாறு கிடைக்குமாம்.. காய்ச்சல் போன்ற நோய் ஏற்பட்ட காலங்களில் இந்த சாற்றை ஒரு நாளைக்கு 3 முறை, அதாவது 6 மணிநேரத்திற்கு ஒரு முறை ஒரு டேபிள் ஸ்பூன் குடித்து வந்தால், ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதுடன் வெள்ளை அணுக்களையும் அதிகரிக்கும்.

ரத்தம் உறைதல் அல்லது உறைதலை ஊக்குவிக்க செயல்புரியும் செல் துண்டுகளுக்கு, "ரத்த தட்டுகள்" அதாவது ரத்த பிளேட்லெட் என்பார்கள்... டெங்கு போன்ற விஷக்காய்ச்சல்கள் நம்மை தாக்கும்போது, இந்த ரத்த பிளேட்லெட்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்.. அதுபோன்ற நேரத்தில் இந்த பப்பாளி இலை சாறு குடித்தால், ரத்த பிளேட்லெட் எண்ணிக்கை அதிகமாகும் என்கின்றன ஆய்வுகள். இதை உணர்ந்துதான், பப்பாளி இலைகளை பயன்படுத்தி மாத்திரைகளும் தயாரிக்கப்படுகின்றன.

பப்பாளி இலை: சர்க்கரை நோயாளிகளுக்கு, பப்பாளிக்காய் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.. அதுபோலவே, இந்த இலைகளையும், உணவில் சேர்த்து கொள்ளலாம்.. இதனால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தப்படும்.

உடல் எடையை குறைக்க வேண்டுமானால், பப்பாளி இலைகளை விட்டுவிடக்கூடாது.. காரணம், இதில், நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம்.. எனவே, இதனை பயன்படுத்தி ஜூஸ் தயாரித்து குடிக்கலாம்... இதனால், தேவையற்ற கொழுப்புகள் கறைக்கப்பட்டுவிடுவதுடன், உடலிலுள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும்.

சிகிச்சைகள்: அதேபோல, தசை வலி, மூட்டு வலிகளுக்கு தரப்படும் சிகிச்சைகளில், பப்பாளி இலைகள் கட்டாயம் இடம்பெறும்.. கீழ்வாதம், மூட்டுவலி போன்ற பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு பப்பாளி இலைகள் மருந்தாக தரப்படுகிறது.

சருமங்களுக்கு இந்த இலைகள் மருந்தாகின்றன.. ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ள இந்த இலைகள், தோலில் ஏற்படும் வயதான சுருக்கத்தை தள்ளி போடுகிறது. முகப்பருக்களை போக்குகிறது.. உடலில் காயங்கள் ஏற்பட்டுவிட்டாலோ, அல்லது வடுக்கள், சரும அலர்ஜி இருந்தால், அதற்கும் இந்த இலையின் விழுதுகளே மருந்தாகின்றன.

தலைமுடி: தலைமுடிக்கும் இந்த பப்பாளி இலையை விழுதாக அரைத்து தடவிவந்தால், தலைமுடி கொட்டுவது நின்றுவிடும். இந்த இலைகளிலுள்ள ஆல்கலாய்டு கலவை, பொடுகு மற்றும் வழுக்கைக்கு எதிராக திறம்பட செயல்படுவதாக கூறுகிறார்கள்,
Previous Post Next Post