THAMIZHKADAL GROUPS


தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும்.. வெளியான மிக முக்கிய அறிவிப்பு.!!!


தமிழகம் முழுவதும் நாளை அனைத்து பள்ளிகளிலும் உயர் கல்விக்கு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற இருக்கிறது.

அதாவது “உயர்வுக்கு படி”. என்ற நிகழ்ச்சி தான் அனைத்து பள்ளிகளிலும் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சி நாளை முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியை உயர்கல்வி வழிகாட்டுக் குழு மற்றும் முன்னாள் மாணவர்கள் குழு இணைந்து செயல்படுத்துகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியுடன் 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு உயர்கல்விக்கு சேராத மாணவர்களை கண்டுபிடித்து அவர்களை மேல்படிப்புக்கு ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளது.