Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Monday, September 2, 2024

ஒரு ஸ்பூன் சீரகம் இருந்தால் இந்த 5 வித நோய்களை விரட்டி விடலாம்!!


நமது இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் பெரும்பாலான பொருட்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தவையாக இருக்கிறது.குறிப்பாக சீரகம் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய பேருதவி புரிகிறது.

மலச்சிக்கல், செரிமானப் பிரச்சனை, வாயுத் தொல்லை, கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்து வருபவர்களுக்கு சீரகம் தீர்வாக உள்ளது.சீரகத்தில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை வழங்குகிறது.கடுமையான மலச்சிக்கலை சந்தித்து வருபவர்கள் சீரகத்தை மருந்தாக எடுத்துக் கொள்ளலாம்.

உடல் எடைக்கு தீர்வு

தேவையான பொருட்கள்:

1)சீரகம்
2)தண்ணீர்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.இந்த நீரை ஆறவைத்து குடித்து வந்தால் உடலில் படிந்த கொழுப்புகள் கரையும்.

மலச்சிக்கலுக்கு தீர்வு

தேவையான பொருட்கள்:

1)சீரகம்
2)விளக்கெண்ணெய்
3)தண்ணீர்

செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும்.பிறகு ஒரு தேக்கரண்டி சீரகத்தை அதில் போட்டு கொதிக்க விடவும்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சில துளிகள் விளக்கெண்ணய் சேர்த்து குடித்தால் குடலில் தேங்கிய மலக் கழிவுகள் முழுமையாக வெளியேறும்.

வாயுத் தொல்லைக்கு தீர்வு

தேவையான பொருட்கள்:

1)சீரகம்
2)ஓமம்
3)பெருஞ்சீரகம்
4)பெருங்காயத் தூள்

செய்முறை:

10 கிராம் சீரகம்,10 கிராம் ஓமம் மட்டும் 10 கிராம் பெருஞ்சீரகம் மற்றும் 10 கிராம் பெருங்காயத் தூளை வாணலியில் சேர்த்து லேசாக வறுத்து ஆறவிடவும்.பிறகு இதை பவுடர் பதத்திற்கு அரைத்து ஒரு டம்ளர் நீரில் கலந்து குடித்தால் வாயுத் தொல்லைக்கு தீர்வு கிடைக்கும்.

மாதவிடாய் வயிற்றுவலிக்கு தீர்வு

தேவையான பொருட்கள்:

1)சீரகம்
2)வெந்தயம்
3)தண்ணீர்

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி 1/2 தேக்கரண்டி சீரகம் மற்றும் 1/4 தேக்கரண்டி வெந்தயத்தை போட்டு ஊற மூன்று மணி நேரத்திற்கு வைத்துக் கொள்ளவும்.பிறகு இந்த நீரை வடிகட்டி குடித்தால் மாதவிடாய் வயிற்றுவலி நிற்கும்.

செரிமானப் பிரச்சனைக்கு தீர்வு

தேவையான பொருட்கள்:

1)சீரகம்
2)சோம்பு

செய்முறை:

சீரகம் மற்றும் சோம்பு சம அளவு எடுத்து வாணலியில் போட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை ஆறவிட்டு பொடியாக்கி சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.