இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கான, 55 சதவீதம் இடங்கள் நிரம்பி உள்ளதால், நடப்பாண்டும் அப்படிப்புக்கு அதிக மவுசு இருப்பது தெரியவந்துள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில், 440க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன.
இக்கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு(92.5 மற்றும், 7.5 சதவீதம் இடஒதுக்கீடு) நடக்கிறது. பொதுக்கலந்தாய்வு நிறைவடைந்து, துணைக் கலந்தாய்வு நடந்து வருகிறது.அண்ணா பல்கலையின் எம்.ஐ.டி., கேம்பஸ், சி.இ.ஜி., கேம்பஸ், காரைக்குடி சிக்ரி, சென்னை, எஸ்.எஸ்.என்., கோவை, சி.ஐ.டி., பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மதுரை, தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரி, கோவை நீலாம்பூர், பி.எஸ்.ஜி., ஐ.டெக்., கோவை, ஜி.சி.டி., சென்னை, எஸ்.ஏ.பி., கேம்பஸ், கோவை, ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, கோவை ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரி, சென்னை ஏ.சி., டெக் கேம்பஸ், சேலம் அரசுக் கல்லூரி உள்ளிட்ட, 29 கல்லுாரிகளில், 100 சதவீத இடங்கள் நிரம்பி உள்ளன.இக்கல்லூரிகளில் சராசரி கட் ஆப் மதிப்பெண், 175க்கு மேல் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரி, சென்னை ராஜலெட்சுமி குழும நிறுவனங்கள், சென்னை லயோலா ஐகேம், காரைக்குடி அழகப்பா, கோவை கே.பி.ஆர்., ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி, ஸ்ரீ சக்தி இன்ஜி., கல்லுாரி, கற்பகம் தொழில்நுட்பக் கல்லுாரி, கதிர் இன்ஜினியரிங் கல்லுாரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி, ஹிந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, நேரு இன்ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி, கோவை அண்ணா பல்கலைக்கழக வளாகம், ஸ்ரீ சாய்ராம், சவீதா உள்ளிட்ட, 81 கல்லுாரிகளில், 95 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன.இதேபோல், 109 கல்லுாரிகளில், 90, 149 கல்லுாரிகளில், 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன. என, கல்வி ஆலோசகர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:பாடப்பிரிவுகளைப் பொறுத்தவரை, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு படிப்புகளில், 55.30 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படிப்புகளில் 15.50 சதவீதம், எலக்ட்ரிக்கல் படிப்புகளில் 7.17 சதவீதம், மெக்கானிக்கல் சார்ந்த படிப்புகளில், 7.46 சதவீதம், சிவில் சார்ந்த படிப்புகளில், 3.69 சதவீதம், மற்றவை, 10.89 சதவீதம், இடங்களும் நிரம்பியுள்ளன.கவுன்சிலிங்கில், 29 கல்லூரிகளில், 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. 83 கல்லூரிகளில், 95 சதவீதத்துக்கும் மேல், 111 கல்லூரிகளில், 90 சதவீதத்துக்கும் மேல், 149 கல்லூரிகளில், 80 சதவீதத்துக்கும் மேல், 172 கல்லூரிகளில், 75 சதவீதத்துக்கும் மேல், 52 கல்லூரிகளில், 10 சதவீதத்துக்கும் குறைவான இடங்கள் நிரப்பியுள்ளன.
2.29லட்சம் பேருக்கு அழைப்பு12 கல்லூரிகள் ஒரு சதவீதத்துக்கும் குறைவான இடங்கள் நிரப்பியுள்ளன. அதேநேரம், 7 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. மொத்தம், 2.29 லட்சம் மாணவர்களுக்கு கவுன்சிலிங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.இதுவரை, 1.20 லட்சம் மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 1.08 லட்சம் மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை. கவுன்சிலிங்கில் சுமார், 47 சதவீதம் மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
மத்திய அரசு கல்லுாரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. கம்ப்யூட்டர் சயின்சுக்கு ஜே!அதிகளவு மாணவர்கள், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை விரும்பி எடுத்துள்ளனர். தொழில்நுட்பம் வளர்ச்சி அடையும் போது, சற்று வேலைவாய்ப்பு வேகம் குறையும். இது நிரந்தரமல்ல.
இது மாணவர்களுக்கு தெரியும். அதனால் தான், மாணவர்கள் தொடர்ந்து அப்பாடத்தை தேர்ந்தெடுக்கின்றனர். பிற படிப்புகளில், இதுபோன்ற பெரியளவு வேலைவாய்ப்பு இருக்காது.நிறுவனங்கள் தொழில்நுட்பம் தெரிந்தால் போதும் என தெரிவிக்கின்றனர். வேலையில் சேர்ந்த பின், மாணவர்களை நிறுவனங்கள் தயார்படுத்தி விடுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
Tags:
பொதுச் செய்திகள்