Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Sunday, September 1, 2024

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு.?



மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும்.

இந்த வருடம் ஜனவரி மாதம் மத்திய அரசு 4 சதவீதம் வரை அகவிலை படியை உயர்த்தியதால் தற்போது ஊழியர்களுக்கு 50% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து ஜூலை-டிசம்பர் மாதங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது‌. இந்நிலையில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் படி செப்டம்பர் முதல் வாரத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதே நேரத்தில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.