Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Tuesday, September 3, 2024

செப்டம்பர் 11ல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!



இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவரும், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அரசியல் தலைவருமான சுதந்திரப் போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது.

தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் செப்டம்பர் 11ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் செப்.21-ல் 4 தாலுகாவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என்று ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

அடுத்தகட்டமாக ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.