Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Saturday, August 17, 2024

GK: கௌதம புத்தர்


1. பௌத்த மதத்தை நிறுவியவர் யார்? கௌதம புத்தர்



2. புத்தரின் இயற்பெயர் என்ன? சித்தார்த்தர்.



3. மகாவீரர், புத்தர் இருவரும் எப்பிரிவை சார்ந்தவர்கள்? சத்திரிய இளவரசர்கள்



4. புத்தர் எந்த வம்சத்தில் பிறந்தார்? சாக்கிய வம்சம்



5. புத்தரின் பெற்றோர் யார்? சுத்தோதனர், மாயாதேவி



6. புத்தரின் தாயார் எப்போது இயற்கை எய்தினார்? புத்தர் ஏழு நாள் குழந்தையாக

இருந்தபோது



7. புத்தரை வளர்த்தவர் யார்? சிற்றன்னை (கௌதமி)



8. புத்தரின் மனைவி யார்? யாசோதரா



9. புத்தரின் மகனின் பெயர் என்ன? இராகுலன்



10. புத்தரின் நெருக்கமான சீடர் யார்? ஆனந்தன்



11. புத்தர் எங்கு பிறந்தார்? கபிலவஸ்து (லும்பினி தோட்டம்) (நேபாளம்)



12. புத்தர் எங்கு மறைந்தார்? குசி நகரம், (உ.பி - தனது 80வது வயதில்)



13. புத்தர் என்பதன் பொருள் என்ன? ஞானம் பெற்ற ஒருவர்



14. புத்தர் எத்தனை ஆண்டுகள் தவம் புரிந்தார்? ஆறு ஆண்டுகள்