Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Monday, August 26, 2024

CISF படையில் 1130 வேலை வாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க..!!



C I S F-வில் உள்ள 1130 கான்ஸ்டபிள் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 39 காலியிடங்கள் உள்ளன.

இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் கடைசி நாளான செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் விண்வெளி ஆய்வு மையம், துறைமுகம், ஏர்போர்ட் உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது வழக்கம்.

இதில் பொதுப் பிரிவினருக்கு 466 இடங்களும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 114 இடங்களும், எஸ்.சி பிரிவினருக்கு 1061 இடங்களும், எஸ்.பி பிரிவினருக்கு 161 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக விண்ணப்பிக்க நீங்கள் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

அதோடு விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி.எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி.எஸ்.டி முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது, மற்ற பொது பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100. எழுத்து தேர்வு, முதல் தகுதி, உடல் திறன், சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, எழுத்து தேர்வு நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும்.

இதற்கு வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதியில் இருந்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.