Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Thursday, August 29, 2024

இனி திருப்பதியில் லட்டு வாங்க இது கட்டாயம்..!


திருப்பதி கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், பெருமாளை தரிசிக்க வந்து செல்கின்றனர். அப்படி வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது ஆதார் அட்டை இருந்தால் தான் லட்டு வழங்கமுடியும் என ஏழுமலையான் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பதியில் நாள்தோறும் 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. திருப்பதி லட்டு பிரசாதத்தை ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்கள் தயாரித்து வருகின்றனர். தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு 2 லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் வாங்க ஆதார் கட்டாயம், ஒருவருக்கு ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும். ஆதாரை காண்பித்தால் மட்டுமே கூடுதலாக ஒரு லட்டு ரூ.50-க்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் லட்டு வேண்டும் என்பவர்கள் லட்டு கவுன்டரில் நேரில் சென்று, ரூ.50 செலுத்தி லட்டுககளை பெற்றுக் கொள்ளலாம்.