Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Wednesday, August 28, 2024

போஸ்ட் ஆபிஸின் சூப்பரான திட்டம்..! மாதந்தோறும் ரூ. 3000 வருமானம்..!



பணத்தை சேமிப்பதற்கான சிறப்பான ஒரு வழிமுறையாக தபால் நிலையங்கள் வழங்கி வருகின்றன. தபால் நிலைய திட்டங்கள் பணத்தை சேமிப்பதற்கு நல்ல தேர்வாக உள்ளன.


அந்த வகையில்அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் (MIS) மாத மாதம் வருமானம் தரும் சிறப்பான திட்டமாக உள்ளது.

இந்த மாதாந்திர வருமான திட்டத்திற்கு தனிநபராகவோ அல்லது கூட்டாகவோ ஒருவர் கணக்கைத் திறக்கலாம். வெறும் 1000 ரூபாயில் முதலீட்டாளர்கள் கணக்கைத் திறக்க முடியும். தனிநபராக முதலீடு செய்யும் ரூ. 9 லட்சம் அதிகபட்ச வரம்பாக்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூட்டுக் கணக்காக முதலீடு செய்யயும் போது அதிகபட்சமாக 15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். அதன்பின்னர் எவ்விதன முதலீடும் செய்ய வேண்டியதில்லை.

போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். இத்திட்டத்தின் வாயிலாக ஐந்து ஆண்டு முதலீடு காலத்திற்கு பின்பு, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மாதம் மாதம் வருமானம் வழங்கப்படும். கணக்கு துவங்கிய நாளிலிருந்து முதிர்வு காலம் வரை ஒவ்வொரு மாதமும் வட்டி வருமானம் செலுத்தப்படும்.80சி பிரிவின் கீழ் மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு ஒரு நிதியாண்டிற்கு 1.50 லட்சம் வரையில் வரி சலுகைகள் கிடைக்கும்.

ஒருவர் ரூ. 5 லட்சம் போஸ்ட் திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ. 3,083 வருமானமாக பெற முடியும். 5 ஆண்டுகளுக்கும் இந்த வட்டி வருமானம் கிடைக்கும். மேலும், MIS திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் முதலிடு செய்யும் போது, ரூ. 5,550 மாத வட்டி வருமானம் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு கிடைக்கும். கூட்டுக் கணக்கில் ஒரு முறை ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால், ரூ. 9250 மாத வட்டி வருமானம் 5 ஆண்டுகளுக்கு பெறலாம்.