Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Tuesday, August 27, 2024

டிஎன்பிஎஸ்சி அறிவிக்க போகும் 18 ஆயிரம் பணியிடங்கள்


கடந்த மூன்று ஆண்டுகளில் 65 ஆயிரத்து 483 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பு ஒன்றில் கூறியுள்ளது.


இந்நிலையில் அடுத்த 17 மாதங்களில், 18 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை டிஎன்பிஎஸ்சி தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் தனியார் துறைகளைவிட சம்பளம் குறைவாக இருந்தாலும் அரசு துறைகளில் வேலைக்கு சேர்வதை பலர் விரும்புகிறார்கள். ஐடி துறையில் லட்சங்களில் சம்பளம் வாங்குவோர் கூட டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளில் வென்று அரசு ஊழியர்கள் ஆகி, அதிகாரத்திற்கு வர விரும்புகிறார்கள். சாமானிய மக்கள் பலரின் கவனவாக இருப்பது எல்லாம் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் வாரியத்தின் அறிவிப்பு மீது தான். டிஎன்பிஎஸ்சி வெளியிடும் அரசு வேலை தொடர்பான அறிவிப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள், எப்படியாவது வேலைக்கு சேர வேண்டும் என்று அதற்கான தீவிரமாக படிக்கிறார்கள்.

யார் முழு அர்பணிப்புடன் படிக்கிறார்களோ, அவர்களில் பலர் வெற்றியும் பெறுகிறார்கள். டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை பொறுத்தவரை லஞ்சம் கொடுத்தால் தான் அரசு வேலையில் சேர முடியும் என்கிற நிலையும் இல்லை என்பதுடன், நேர்காணல் என்பது பல பதவிகளுக்கு நீக்கப்பட்டுள்ளது. எனவே மதிப்பெண் எடுத்தாலே வெற்றி உறுதி என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பலரும் டிஎன்பிஎஸ்சி வெளியிடும் குரூப் 1, குரூப் 2, குரூப் 4, இந்து அறநிலையத்துறை, நீதித்துறை, பொறியியல் துறை உள்பட பல்வேறு போட்டி தேர்வுகளில் ஆர்வமுடன் பங்கேற்கிறார்கள்.

இதனிடையே முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் 65 ஆயிரத்து 483 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளது. மேலும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 77 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக மட்டும் 17 ஆயிரத்து 595 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டிஎன்பிஎஸ்சி தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இனி அந்த துறையில் பணிகள் வேகமெடுக்கும் என தெரிகிறது. டிஎன்பிஎஸ்சி வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்தை இலக்காக கொண்டு இன்னும் 17 மாதங்களில் குறைந்தது 18 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளதாம். இந்த எண்ணிக்கை காலி பணியிடங்களின் எண்ணிக்கைகு ஏற்ப அதிகமாகவும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். இதற்காக பல்வேறு அரசு துறைகளில் காலி பணியிடங்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது, துறை வாரியான பட்டியல் தயாரிக்கப்பட்டு, அந்த அடிப்படையில் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகுமாம்.

அதேபோல் டிஎன்பிஎஸ்சி கடந்த காலங்களில் தேர்வு முடிவுகளை தாமதமாகவே வெளியிட்டு வந்தது. இந்நிலையில் கடந்த காலங்களில் போல் அல்லாமல் மிக விரைவாக வெளியிடவும் அரசு பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளதாம். யுபிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் தொடர்பாக எப்படி அட்டவணை வருகிறதோ, அதுபோல் அட்டவணையும், அதன்படி தேர்வுகளும், தேர்வு முடிவுகளும், சரியாக வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி நடந்தால் அரசு பணியில் சேர விரும்பும் பலர் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள்.

தற்போதைய நிலையில் டிஎன்பிஎஸ்சி சார்பில் அடுத்த மாதம் 14-ந் தேதி 2,327 பணியிடங்களுக்கான குரூப்-2 முதல்நிலை தேர்வு, அக்டோபர் மாதம் 14-ந் தேதி 654 பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு, நவம்பர் மாதம் 9-ந் தேதி 861 பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்களுக்கு தொழில்நுட்ப துறை பணியிட தேர்வுகள், அதே மாதம் 18-ந் தேதி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணியிடங்கள் தேர்வு, டிசம்பர் மாதம் 14-ந் தேதி குற்ற வழக்கு தொடர்பு துறை பணியிடங்கள், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4-ந் தேதி குரூப்-5ஏ தேர்வு நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு தேர்வும் நடத்துவதற்கான அட்டவணை வெளியிடப்படப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.