Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 12, 2024

தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு வினா விடை - 23

1) மரக்கலத்திற்குத் தமிழில் வழங்கும் பெயர்களில் ஒன்று

 

(A) வாரணம்

(B) பரவை

(C) புணரி

(D) திமில்

 

2) கி.மு. பத்தாம் நூற்றாண்டில் எவை தமிழகத்திலிருந்து அரசன் சாலமனுக்கு அனுப்பப்பட்ட பொருள்கள்?

 

(A) மிளகும், சந்தனமும்

(B) யானைத் தந்தமும், மயில் தோகையும்

(C) முத்தும், துகிலும்

(D) கரும்பும், அரிசியும்

 

3) ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி

 

(A) ராணி மங்கம்மாள்

(B) அஞ்சலை அம்மாள்

(C) வேலு நாச்சியார்

(D) மூவலூர் இராமாமிர்தம்

 

4) உலகம் உருண்டையானது என்ற அறிவியல் சிந்தனை கொண்ட திருக்குறள்

 

(A) சுழன்றும் ஏர்பின்னது உலகம்

(B) ஆதிபகவன் முதற்றே உலகு

(C) உலகந் தழீஇயது ஒட்பம்

(D) எவ்வதுறைவது உலகம்

 

5) தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் எது ?

 

(A) தேசியக்கொடி.

(B) தேசபக்தி

(C) கதரின் வெற்றி

(D) மனோகரன்

 

6) பொருத்துக.

 

(a) ஞானக் கண்ணாடி          1. உரைநடை வடிவிலான சமயநூல்

(b) வேதவிளக்கம்                2. நகைச்சுவைக் கதை நூல்

(c) தொன்னூல் விளக்கம்    3. சமய நூல்

(d) பரமார்த்தகுரு கதை       4. குட்டித் தொல்காப்பியம்

 

(A)     2      4     1      3

(B)     3      1     4      2

(C)     1      3     2      4

(D)     4      2     3      1

 

7) மொழி ஞாயிறு என்றழைக்கப்படுபவர்

 

(A) தாமோதரனார்

(B) தேவநேயப் பாவாணர்

(C) இளங்குமரனார்

(D) வரதராசனார்

 

8) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிலப்பதிகாரம் பற்றி எழுதிய கட்டுரை?

 

(A) குடிமக்கள் காப்பியம்

(B) தமிழ்க்காதல்

(C) தமிழர் திருமணம்

(D) வீரச்சுவை

9. பொருத்துக:

 

(a) நட்சத்திரக் குழந்தைகள்            1. கல்கி

(b) கணையாழியின் கனவு              2. பி.எஸ். ராமையா

(c) பிரபந்த கானம்                            3. ந.பிச்சமூர்த்தி

(d) கொலு பொம்மை                       4. மௌனி

 

(A)           3             4              1              2

(B)           3             1              4              2

(C)          2              1              4              3

(D)          2              3             4              1

 

10.மோகனா என்னும் பாலசரஸ்வதி பரதநாட்டியத்திற்காக எந்த வயதில் காஞ்சிபுரத்தில் மேடை ஏறினார்?

 

(A) 10 வயதில்

(B) 7 வயதில்

(C) 12 வயதில்

(D) 16 வயதில்

 

11. நாடகக்கலையை மீட்டெடுப்பதே தனது குறிக்கோள் என்று கூறியவர்

 

(A) கந்தசாமி

(B) ந. முத்துசாமி

(C) வேலுச்சாமி

(D) அழகர்சாமி

 

12. ‘காந்திமகான் கதை’ எனும் இசை நூலின் ஆசிரியர்

 

(A) வேழ வேந்தன்

(B) பெ. தூரன்

(C) கொத்த மங்கலம் சுப்பு

(D) தமிழழகன்

 

13. பாரதிதாசன் ‘குடும்பவிளக்கு’ என்னும் நூலில் எப்பகுதியில் ‘விருந்தோம்பல்’ எனும் தலைப்பில் கவிதை படைத்துள்ளார்?

 

(A) ஐந்தாம் பகுதி

(B) முதல் பகுதி

(C) நான்காம் பகுதி

(D) இரண்டாம் பகுதி

 

14. தண்டமிழ் ஆசான் என யார்? யாரைப் பாராட்டினார்?

 

(A) கம்பர், சடகோபரை

(B) இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனாரை

(C) சீத்தலைச் சாத்தனார், இளங்கோவடிகளை

(D) பாரதியார், கம்பரை

 

15. “இஸ்லாமியக் கம்பர்” எனப் போற்றப்படுபவர்

 

(A) அப்துல் மரைக்காயர்

(B) முகமதுலெப்பை

(C) கடிகை முத்துப் புலவர்

(D) உமறுப்புலவர்

 

16. எட்டுத் தொகை நூல்களில் ‘ஓங்கு’ என்னும் அடைமொழி பெற்ற நூல்

 

(A) குறுந்தொகை

(B) கலித்தொகை

(C) நற்றிணை

(D) பரிபாடல்

 

17. இரட்டுற மொழிதல் என்பது

 

(A) ஒரு சொல் பல பொருட்களைத் தருதல்

(B) ஒரு சொல் இரண்டு பொருள்பட அமைந்து வருதல்

(C) பல சொற்கள் ஒரு பொருள் தருதல்

(D) ஒரே சொல் மீண்டும் மீண்டும் பலமுறை வருதல்

 

18. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை பெயரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாவட்டம் எது?

 

(A) கன்னியாகுமரி

(B) திருநெல்வேலி

(C) திருச்சி

(D) கோவை

 

19. மடந்தை பருவத்தின் வயது

 

(A) 8-11

(B) 12-13

(C) 14-19

(D) 20-25

 

20. கலம்பக உறுப்புகள்

 

(A) ஆறு

(B) எட்டு

(C) பதினெட்டு

(D) பன்னிரெண்டு

No comments:

Post a Comment