👉 பூமியில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், புவி மாசடைவதைத் தடுக்கும் எண்ணத்துடனும், உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
👉இயற்கை வளம், சுற்றுசூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.
👉1970-ல் 150 ஆண்டுகால தொழிற்சாலை கழிவால் பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழலை பாதுகாக்ககோரி சில நாடுகளில் லட்சக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.
👉இதுவே பூமி தினமாக உருவெடுத்தது.
👉முதல் உலக பூமி தினம் அமெரிக்காவில் 1970, ஏப்.22ல் கடைபிடிக்கப்பட்டது.
👉1990-ம் ஆண்டில், ஐ.நா சபையால் 'புவி தினம்' அங்கீகரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் அன்று முதல் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
👉இந்த நாளில் பூமியின் இயற்கைச் சூழலை மாசுபடுத்தாமல் காக்கும் நோக்கில் மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
Tags:
IMPORTANT DAYS