Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 3, 2024

பொது அறிவு வினா விடைகள் - 08

1 சிங்கப்பூரின் பழைய பெயர்?

விடை: டெமாஸெக்

2 ”மானின் விடுதலை”-கதைப் பாடலின் ஆசிரியர்?

விடை: அழ.வள்ளியப்பா

3 மனிதனின் உமிழ்நீர் pH மதிப்பு

விடை: 6.5 –7.5

4 ரெனின் என்ற என்ஸைம் ……………… மீது வினைபுரிகிறது

விடை: கேஸினோஜன்

5 வானவில்லில் 7 வண்ணங்கள் உள்ளன என்று கண்டுபிடித்தவர்?

விடை: ஐசக் நியூட்டன்

6 ”மாற்றானுக்கு இடம் கொடேல்”-போன்ற முதுமொழிகள் மாணவர்களுக்கு உணர்த்துவது?

விடை: நன்னெறி

7 அமிலம் காரம் பற்றிய புதிய கொள்கை

விடை: பிரான்ஸ்டெட்–லவ்ரி கொள்கை

8 “காமன் மேன்” கார்ட்டூனின் தந்தை யார்?

விடை: ஆர்.கே.லக்‌ஷ்மண்

9 திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை: கால்டுவெல்

10 ”தென்னை மரத்தின் ஓலைகள் நிலவொளி மென்காற்றில் சலசலக்கும்”-இதில் உள்ள ”சலசலக்கும்” என்பது?

விடை: இரட்டைக்கிளவி

No comments:

Post a Comment