உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..? சப்பாத்தியா..? அரிசி சாதமா..? இப்படி சாப்பிடுங்க..!!


இன்றுள்ள நவீன வாழ்க்கை முறை, உடல் பருமன் என்பது பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாற்றிவிட்டது.

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான உணவு பழக்கங்கள் இருக்கும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவு பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்வார்கள். 

சிலர் உடல் எடையை குறைக்க சப்பாத்தி சாப்பிடுகிறார்கள். சிலர் அரிசி சாதம் சாப்பிடுகிறார்கள். சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியுமா? டையட்டில் இருக்கும் போது சாதம் சாப்பிடலாமா? என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். சிலர் உடல் எடையை குறைக்க சப்பாத்தி பலனளிப்பதாக கருதுகின்றனர்.

உணவியல் நிபுணர்கள் கூற்றுப்படி, அரிசி மற்றும் ரொட்டி இரண்டின் ஊட்டச்சத்து மதிப்பிலும் பெரிய வித்தியாசம் உள்ளது. எடை இழப்புக்கு இரண்டும் பயனுள்ளதாக இருக்கும். வாரத்தில் 4 நாட்கள் ரொட்டி சாப்பிட்டால், 2 நாட்களுக்கு சாதம் சாப்பிட வேண்டும் என்கின்றனர். 

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ரொட்டி மற்றும் அரிசி இரண்டையும் சாப்பிடலாம். அதே சமயம் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பட்னியாக இருக்கக்கூடாது. அது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

ஜாவர், ராகி மற்றும் தினை ஆகியவற்றால் செய்யப்பட்ட ரொட்டி எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். இதில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து உள்ளது. ஜாவர், ராகி ஆகியவற்றில் செய்யப்பட்ட ரொட்டியில் சத்தும் உள்ளது. உடல் எடையை குறைக்கவும் உதவும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அரிசியை விட ரொட்டி சாப்பிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.

எடை இழப்புக்கான முக்கிய குறிப்புகள்

— நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கவும், தினசரி 40 கிராம் நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

— தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

— உங்கள் உணவில் உப்பு மற்றும் சர்க்கரையின் அளவைக் குறைக்க வேண்டும்.

— பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

— சரியான முறையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.

— புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்க்கவும்.
Previous Post Next Post