பொங்கல் என்பதற்கு பொங்கி வழிதல் பொங்குதல்' என்பது பொருள். அதாவது புதிய பானையில், புத்தரிசியிட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து வரும்.
அதுபோல, தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும் என்பது நம்பிக்கை.
2024 ம் ஆண்டில் ஜனவரி 14 ஆம் தேதி போகிப் பண்டிகை துவங்கி, ஜனவரி 17 ம் தேதி காணும் பொங்கல் வரை மொத்தம் நான்கு நாட்கள் வருகின்றன. எப்பவும் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதிதான் வரும். ஆனால் இந்த வருடம் ஜனவரி 15ஆம் தேதியே கொண்டாடப்படுகிறது. மார்கழியின் கடைசி நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இது இந்திர விழா என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.
தேதிகள்
1. ஜனவரி 14ஆம் தேதி போகிப் பொங்கல்
2. ஜனவரி 15ஆம் தேதி சூரிய பொங்கல்
3. ஜனவரி 16ஆம் மாட்டுப் பொங்கல்
4. ஜனவரி 17ஆம் காணும் பொங்கல்
பொங்கல் வைக்க நல்ல நேரம் :
ஜனவரி 15ஆம் தேதி (தை மாத 01ஆம் தேதி)
பொங்கல் வைக்க நல்ல நேரம்
காலை 6.30 முதல் 7.30 அல்லது 9.30 முதல் 10.30 மணி வரையில் பொங்கலிடலாம்.
மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்
ஜனவரி 16ஆம் தேதி ( தை 02ஆம் தேதி)
காலை 11.00 முதல் மதியம் 01.00 மணி வரையான நேரத்தில் பொங்கல் வைக்கலாம்.
தைப் பொங்கல் செழிப்பைக் குறிக்கிறது. மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புது ஆடைகள் அணிந்து சூரியபகவானை வழிபடுவார்கள். உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தை பொங்கல் மிக முக்கியமான நாள்.
கிராமப்புறங்களில் மக்கள் இந்த தை பொங்கலை திறந்த வெளியில் அல்லது தங்கள் வீட்டின் முற்றத்தில் கொண்டாடுகிறார்கள். இதுதான் பாரம்பரிய முறையாகும். மஞ்சள் மற்றும் குங்குமம் தடவிய பாத்திரத்தில் புதிய மஞ்சள் இலைகள் கட்டிய பாத்திரத்தில் பொங்கலை செய்வார்கள்.
அந்த பொங்கல் பொங்கி வந்ததும், மக்கள் "பொங்கலோ பொங்கல்" என்று மகிழ்ச்சியாகவும் சத்தமுடனும் கூறுவார்கள். தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும் என்று அர்த்தமாகும்.
Tags:
பொதுச் செய்திகள்